காப்­பீட்டு துறை பங்கு வெளி­யீட்டு விதி­களில் மாற்றம்காப்­பீட்டு துறை பங்கு வெளி­யீட்டு விதி­களில் மாற்றம் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு:ரூ.67.40 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு:ரூ.67.40 ...
விரைவில் அமல்! ‘நுாடுல்ஸ்’ உணவின் தரத்தை நிர்­ண­யிக்க புதிய விதி­மு­றைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2016
07:26

புது­டில்லி : குழந்­தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி உண்ணும், ‘நுாடுல்ஸ்’ உண­வுக்கு, பிரத்­யேக தரக் கட்­டுப்­பாட்டு விதி­மு­றை­களை உரு­வாக்க, தேசிய உணவு பாது­காப்பு தர நிர்­ணய ஆணை­ய­மான, ‘எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,’ திட்­ட­மிட்டு உள்­ளது.
நெஸ்லே இந்­தியா நிறு­வ­னத்தின், ‘மேகி’ நுாடுல்சில், நிர்­ண­யிக்­கப்­பட்ட அளவை விட, ஈயம், ‘மோனோ­சோ­டியம் குளூட்­டமேட்’ உள்­ள­தாக கூறி, அதன் விற்­ப­னைக்கு, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., 2015 ஜூன் மாதம் தடை விதித்­தது. இந்த குற்­றச்­சாட்டை நெஸ்லே மறுத்­தது. இது தொடர்­பாக, நெஸ்லே தாக்கல் செய்த மனுவை விசா­ரித்த மும்பை ஐகோர்ட், ‘மூன்று தனியார் பரி­சோ­தனை கூடங்­களில், நுாடுல்ஸ் மாதி­ரி­களை ஆய்வு செய்ய வேண்டும்’ என்ற நிபந்­த­னை­யுடன், தடையை நீக்­கி­யது. இதை எதிர்த்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சுப்ரீம் கோர்ட்டில், மேல்­மு­றை­யீடு செய்­துள்­ளது. அந்த மனுவில், ‘அரசு அங்­கீ­காரம் பெற்ற பரி­சோ­தனை கூடங்­களில், நுாடுல்ஸ் மாதி­ரி­களை ஆய்வு செய்ய வேண்டும்’ என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. இத­னி­டையே, கடந்த ஆண்டு நவம்பர் முதல், நெஸ்லே மீண்டும் நுாடுல்ஸ் விற்­ப­னையை துவக்­கி­யது.
இந்­நி­லையில், சர்ச்­சைக்கு இட­மற்ற வகையில், ஒரே சீரான தர நிர்­ணய விதி­மு­றை­களின் கீழ், நுாடுல்ஸ் மாதி­ரி­களை ஆய்வு செய்­வ­தற்­கான நடை­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்த, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., திட்­ட­மிட்டு உள்­ளது. தற்­போது, நுாடுல்ஸ் உட்­பட, அனைத்து உட­னடி உணவுப் பொருட்­க­ளுக்கும், பொது­வான தர நிர்­ணய நடை­மு­றைதான் உள்­ளது. அதனால், நுாடுல்­சுக்கு மட்டும் பிரத்­யேக தரக் கட்­டுப்­பாட்டு விதி­மு­றைகள் உரு­வாக்­கப்­பட உள்­ளன.
இந்த தெளி­வான விதி­மு­றைகள் மூலம், நுாடுல்சில் சுவைக்­காக சேர்க்­கப்­படும், மோனோ­சோ­டியம் குளூட்­டமேட் உள்­ளிட்ட, மூலப்­பொ­ருட்­களின் அளவு குறித்த சர்ச்­சைக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படும். ஆய்வின் போது, நிர்­ண­யிக்­கப்­பட்ட அளவை விட, கூடு­த­லாக இருப்­பது தெரி­ய­வந்தால், நுாடுல்ஸ் விற்­பனை தடை செய்­யப்­படும். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., முதன்­மு­த­லாக, ஒரு உணவுப் பொரு­ளுக்கு மட்டும், பிரத்­யேக தர அள­வீட்டை நிர்­ண­யிப்­பது, இதுவே முதன்­முறை. விரைவில், புதிய விதி­மு­றைகள் குறித்த அறி­விப்பு வெளி­யாகும் என, தேசிய உணவு பாது­காப்பு தர நிர்­ணய ஆணைய உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.
ஒரு­சில நிறு­வ­னங்­களின், ‘நுாடுல்ஸ், பாஸ்டா’ போன்ற உட­னடி உண­வு­களில், ‘மோனோ­சோ­டியம் குளூட்­டமேட்’ இருந்­தாலும், ‘எம்.எஸ்.ஜி., சேர்க்­கப்­ப­ட­வில்லை’ என்ற வாசகம் இடம் பெற்­றி­ருக்கும். அத்­த­கைய உணவு நிறு­வ­னங்கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு, மாநில அர­சு­க­ளுக்கு, தேசிய உணவு பாதுகாப்பு தர நிர்­ணய ஆணையம்,உத்­த­ர­விட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)