பதிவு செய்த நாள்
21 மே2016
04:55

மும்பை:உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்கும் வழிமுறை களை, ‘டெக் மகிந்திரா’ நிறுவனம் கண்டறிந்துள்ளது. டெக் மகிந்திரா நிறுவனம், மென்பொருள் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில், உணவுப் பொருட்கள் அதிகளவில் பாழாகி வருகின்றன. விளைபொருட்கள் பாழாகுவதை தடுக்க, டெக் மகிந்திரா வழிமுறைகளை கண்டறிந்துள்ளது. இதன் மூலம், 20 சதவீத அளவிற்கு உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்க முடியும்.
இதுகுறித்து, டெக் மகிந்திரா அதிகாரி ஒருவர் கூறியதாவது:விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் விளைபொருட்களை, அழுகுவதற்கு முன் உடனுக்குடன் சந்தைக்கு கொண்டு செல்ல, முறையான திட்டமிடலுடன் கூடிய, போக்குவரத்து மேலாண்மை கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம், 15 – 20 சதவீத அளவிற்கு, உணவுப் பொருட்கள் வீணாவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|