பதிவு செய்த நாள்
21 மே2016
04:58
புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனம், ‘எஸ் கிராஸ்’ மாடல் காரில், ‘பிரேக்’ பழுதை சரி செய்து தருவதாக அறிவித்துள்ளது. மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்று, ‘எஸ் கிராஸ்’ என்ற மாடல். இதன் விலை, டில்லியில், 8.03 லட்சம் ரூபாயிலிருந்து 12.03 லட்சம் ரூபாய் என்றளவில் உள்ளது. விற்பனை செய்யப்பட்ட எஸ் கிராஸ் கார்களில், பிரேக் பகுதியில் பழுது ஏற்பட்டு உள்ளதை, மாருதி நிறுவனம் கண்டறிந்து உள்ளது. இதையடுத்து, 20 ஆயிரத்து 427 கார்களில், பழுதை சரி செய்து கொடுக்க, மாருதி நிறுவனம் முன்வந்துள்ளது. இதுகுறித்து, மாருதி நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எஸ் கிராஸ் கார்களில், ‘பிரேக்’ பகுதியில் பழுது உள்ளது தெரியவந்துள்ளது. இந்த காரை வாங்கிய வாடிக்கையாளர்கள், எங்களை தொடர்பு கொண்டால், பிரேக் பகுதி இலவசமாக மாற்றி தரப்படும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|