பதிவு செய்த நாள்
21 மே2016
05:07
புதுடில்லி:நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை, இந்தாண்டின் முதல் காலாண்டில், 20.8 சதவீதம் குறைந்து, 19.90 லட்சமாக சரிவடைந்துள்ளது. இதே காலத்தில், ‘ஹெவ்லட் பேக்கர்டு’ நிறுவனத்தின் கம்ப்யூட்டர் விற்பனை, 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய கம்ப்யூட்டர் சந்தையில், இந்நிறுவனம், 25.6 சதவீத பங்களிப்புடன், முதல் இடத்தில் உள்ளது. ‘டெல்’ நிறுவனம், 23.6 சதவீத பங்களிப்புடன், இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவின், ‘லெனோவா’ நிறுவனம், கம்ப்யூட்டர் விற்பனையில், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மதிப்பீட்டு காலாண்டில், இந்நிறுவனம், 19.7 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. ‘ஸ்மார்ட் போன், டேப்லெட்’ போன்ற சாதனங்களால், வீடுகளில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் விற்பனை குறைந்து வருகிறது. இந்தாண்டின் முதல் காலாண்டில், உலகளாவிய, கம்ப்யூட்டர் விற்பனை, 6.06 கோடியாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|