பதிவு செய்த நாள்
22 மே2016
04:08

மும்பை:மின்னணு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வலைதள நிறுவனங்கள் பல, தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகின்றன. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக வழங்கும் சலுகைகளால், இத்தகைய நிலையை சந்தித்துள்ளன. மத்திய அரசின் சமீபத்திய கட்டுப்பாடுகளால், அவை சலுகைகளை மேலும் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, லாபமீட்டாமல் உள்ள வலைதள நிறுவனங்களில் மேலும் முதலீடு செய்ய, முதலீட்டாளர்கள் தயங்குகின்றனர். இதனால், அவற்றின் மதிப்பும் குறைந்துள்ளது. இதை பயன்படுத்தி, அந்நிறுவனங்களை பல பெரிய நிறுவனங்கள் கையகப்படுத்தி வருகின்றன. இந்த வகையில், ‘காரட்லேன்’ வலைதள நிறுவனத்தை, ‘டைடன்’ குழுமமும், ‘பேப்பர்னிஷ்’ நிறுவனத்தை, ‘பியூச்சர் ரீடெய்ல்’ குழுமமும் கையகப்படுத்தியுள்ளன. ‘வருங்காலத்தில், ஒவ்வொரு பிரிவிலும், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வலைதளத்தில் இருக்கும்’ என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|