பதிவு செய்த நாள்
22 மே2016
04:22

புதுடில்லி;இந்தியாவில், 'பேமன்ட் பேங்க்' அமைக்கும் பணிகளில், கூட்டு நிறுவனங்களுடன் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த, சன் பார்மா நிறுவனம், திடீரென்று அத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. கிராமப் புறங்களிலும், வங்கிச் சேவையை விரிவாக்கும் திட்டத்தின் கீழ், பேமன்ட் வங்கி துவங்க, சன் பார்மாவின், 'திலிப் சங்வி பேமிலி அண்ட் அசோசியேட்ஸ்' உட்பட, 11 நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, பேமன்ட் வங்கி விதிமுறைகளை, 18 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு, உரிமம் வழங்கப்படும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்தது. பேமன்ட் வங்கிகள், அதிகபட்சமாக, ஒரு லட்சம் ரூபாய் வரை டிபாசிட் திரட்டலாம்; கடன் வழங்க முடியாது. 'டெபிட் கார்டு' வழங்கலாம். பல்வேறு பணப் பரிவர்த்தனை சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கலாம். மொபைல் போன் வாயிலான பணப் பரிமாற்ற சேவையை மேற்கொள்ளலாம். வங்கிகளை விட, குறைந்த கட்டணத்தில், அன்னியச் செலாவணி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம்.
இத்தகைய பேமன்ட் வங்கிச் சேவையை, சன் பார்மா நிறுவனம், ஐ.டி.எப்.சி., வங்கி, டெலினார் பைனான்சியல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து துவக்க முடிவு செய்தது. இது தொடர்பாக, கடந்த எட்டு மாதங்களாக, மூன்று நிறுவனங்களும், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இந்நிலையில், சன் பார்மா திடீரென்று, பேமன்ட் வங்கி துவங்கும் திட்டம் கைவிடப்பட்டதாக, அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, சன் பார்மா உள்ளிட்ட மூன்று நிறுவனங்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், 'பேமன்ட் வங்கி திட்டத்தை கைவிட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை விரைவில் ரிசர்வ் வங்கியிடம் தெரிவிக்க உள்ளோம். பேமன்ட் வங்கி துவக்க, உரிமம் கோர மாட்டோம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்கான காரணத்தை, சன் பார்மா தெரிவிக்கவில்லை.
வங்கி துறையில் நிலவும் கடுமையான போட்டி, வலைதள பணப் பரிமாற்றங்கள் பெருகி வருவது, பேமன்ட் வங்கிச் சேவைகளுக்கு உள்ள கடுமையான கட்டுப்பாடுகள் போன்றவை தான், சன் பார்மாவின் முடிவுக்கு காரணம் என, கூறப்படுகிறது. மேலும், கிராமப்புறங்களில் பேமன்ட் வங்கி கிளைகளை துவக்க, அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு அதிகம் செலவிட வேண்டும் என்பதும், முதலீட்டிற்கு ஏற்ற வருவாய் பெற நீண்ட காலம் ஆகும் என்ற கணக்கீடும், சன் பார்மாவின் முடிவிற்கு காரணமாக இருக்கலாம் என, வங்கி துறையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, 'சோழமண்டலம் டிஸ்ட்ரிபியூஷன் சர்வீஸ்' நிறுவனமும், ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெற்ற பின், பேமன்ட் வங்கி திட்டத்தை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.
'பேமன்ட் பேங்க்' துவக்கஉள்ள நிறுவனங்கள்ஆதித்ய பிர்லா நுவோஏர்டெல் எம் காமர்ஸ் சர்வீசஸ்அஞ்சல் துறைபினோ பே டெக்என்.எஸ்.டி.எல்.,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்விஜய் சேகர் சர்மாடெக் மகிந்திராவோடபோன் எம் - பைசா
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|