பதிவு செய்த நாள்
23 மே2016
08:01
வீடு, கார் மற்றும் ஸ்மார்ட் போன்களை மாதத் தவணை முறையில் வாங்குவது போல, இனி மருத்துவ காப்பீடுகளையும் மாதத் தவணையில் வாங்கலாம். அதிக பிரீமியம் ெலுத்த முடியாதவர்களுக்காக இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பியூச்சர் ஜெனரல் இந்தியா இன்சூரன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இ.எம்.ஐ., என குறிப்பிடப்படும் மாதத் தவணையில் மருத்துவ காப்பீடு வசதியை அறிமுகம் செய்து உள்ளன. மாத, காலாண்டு மற்றும் அரையாண்டு எனும் அடிப்படையில் தவணையை செலுத்தலாம். மருத்துவ காப்பீட்டில், அதிக ‘சம் அஸ்யூர்ட்’ தொகை வேண்டும் என விரும்பினாலும் அதற்கேற்ற வகையில் அதிக பிரீமியம் செலுத்த முடியாதவர்களுக்கு இந்த வசதி ஏற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால், இந்த வசதியில் மொத்த பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும் என்பதையும், தள்ளுபடி சலுகைகள் இருக்காது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், குறிப்பிட்ட அளவிலான தொகைக்கு மேல் தான் இவை பொருந்தும் நிலையும் இருக்கலாம்.இதற்கு முன், அதிக பிரீமியம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ள சிலர் அதற்காக கிரெடிட் கார்டை பயன்படுத்துவது உண்டு. ஆனால், இதற்கான வட்டி விகிதம் அதிகம். இந்த நிலையில் மாதத்தவணை வசதி எற்றதாக அமையலாம் என கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|