சுந்­தரம் பாஸ்ட்னர்ஸ்லாபம் ரூ.372 கோடிசுந்­தரம் பாஸ்ட்னர்ஸ்லாபம் ரூ.372 கோடி ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.25 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.25 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
செலவுகளை தீர்மானிக்கும் வழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2016
08:03

செலவு செய்­வ­திலும், பொருட்­களை வாங்­கு­வ­திலும் எவ்­வ­ளவு தான் கவ­ன­மாக இருந்­தாலும் சரி, நாம் தேவை­யான பொருட்­களை மட்டும் வாங்­கு­வ­தில்லை, தேவை­யில்­லாத பொருட்­க­ளையும் சேர்த்தே வாங்­கு­கிறோம். இதற்கு பல கார­ணங்கள் இருக்­கலாம்.
சில பொருட்­களை நுகர்­வுக்­காக வாங்­கு­கிறோம். சில­வற்றை பயன்­பாட்­டிற்­காக வாங்­கு­கிறோம். சில­வற்றை அந்த நொடியின் ஈர்ப்பால் வாங்­கு­கிறோம். காரணம் எது­வாக இருந்­தாலும் சரி, நாம் செய்யும் செல­வுகள் நம்­மு­டைய பட்­ஜெட்டை மட்டும் பாதிப்­ப­தில்லை. நம்­மு­டைய நிகர மதிப்­பையும் சேர்த்தே பாதிக்­கின்­றன. எப்­படி என அறிய முதலில் செல­வு­களை புரிந்து கொள்வோம்.

2 வகை செலவுநுகர்வு : உணவு, குளிர்­பானம் போன்­றவை. இந்த வகை பொருட்­களை வாங்கி பயன்­ப­டுத்­திய பிறகு நம்­மிடம் எதுவும் இருக்­காது. அவற்றின் அனு­பவம் மற்றும் நினை­வு­களே இருக்கும்.
பயன்­பாடு : நுகர்வு நோக்கில்அல்­லாமல் பயன்­பாடுநோக்கில் வாங்கும் பொருட்கள் நம்­மி­டமே இருக்கும்.அவற்றை நாம் மீண்டும்விற்கும் வாய்ப்பும் இருக்­கி­றது.
வளர்ச்சியும் தேய்மானமும்பயன்­பாட்­டிற்­காக வாங்கும் பொருட்­களை அவற்றின் தன்­மைக்­கேற்ப இரண்டு வகை­யாக பிரிக்­கலாம். சில பொருட்­களை வாங்­கிய விலைக்கு குறை­வா­கவே மறு விற்­பனை செய்ய முடியும். அந்த பொருட்­களின் மதிப்பு தேய்ந்து கொண்டே வரும். சில பொருட்­களை வாங்­கி­யதை விட அதிக விலைக்கு விற்­கலாம். இவற்றின் மதிப்பு வளர்ந்து கொண்டே இருக்கும்.
தேய்­மானம் கொண்ட பொருட்கள்வாக­னங்கள், பிரிஜ், வாஷிங் மிஷின் போன்ற வீட்டு உப­யோக பொருட்கள், கம்ப்­யூட்­டர்கள், ஸ்மார்ட்­போன்கள், ஆடைகள், டிவிடி, வீடி­யோ கேம் போன்ற பொழு­து­போக்கு சாத­னங்கள்.
மதிப்பு கூடும் பொருட்கள்வீடு, பங்­குகள், பத்­தி­ரங்கள், பரஸ்­பர நிதிகள் போன்ற முத­லீ­டுகள், சுய முன்­னேற்­றத்­திற்­கான செல­வுகள், மதிப்பு மிக்க சேக­ரிப்­புகள்.
மெல்லத் தேயும் பொருட்கள்தேய்­மானம் கொண்ட பொருட்­களை முற்­றிலும் வாங்­காமல் இருப்­பதும் சாத்­தி­ய­மில்லை. ஆனால், மெல்ல தேயும் பொருட்­களை வாங்­கலாம். அதா­வது நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்ட பொருட்­களை வாங்கும் போது, அவற்றின் மதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வரும் என்­ப­தோடு, பரா­ம­ரிப்பு செலவும் குறை­வா­கவே இருக்கும்.

நிகர மதிப்புபொருட்­களை வாங்கும் முன், அவற்றின் தேய்­மா­னத்­தையும் மனதில் கொள்ள வேண்டும். தேய்­மானம் கொண்ட பொருட்­களை வாங்­கு­வதை குறைத்­துக்­கொண்டு, மதிப்பு கூடும் பொருட்­களை வாங்­கு­வது சரி­யாக இருக்கும். பொருட்­களின் தேய்­மா­னத்தால் ஏற்­படும் இழப்பு, பொருட்­களின் கூடும் மதிப்பால் ஏற்­படும் பல­னை­விட குறை­வாக இருந்தால் அது உங்கள் நிக­ர­ம­திப்பை உயர்த்தும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)