பதிவு செய்த நாள்
26 மே2016
00:19

புதுடில்லி : பிரபல, ‘டேட்டிங் ஆப்’ நிறுவனமான ஹேப்பன், இந்தியாவில் கால்பதிக்க முடிவு செய்துள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ஹேப்பன் நிறுவனம், ‘டேட்டிங் ஆப்’ சேவையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2014ல், பாரீசில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், விரிவாக்கத் திட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்தியாவை மையப்படுத்தி, ஹேப்பன் நிறுவனம், ‘டேட்டிங் ஆப்’ சேவையை துவக்க உள்ளது. இந்த ஆண்டிற்குள், 10 லட்சம் வாடிக்கையாளர்கள் என்ற இலக்கை எட்டவும் முடிவு செய்துள்ளது. விரிவாக்கத் திட்டங்களுக்காக, ஹேப்பன் நிறுவனம், 11.20 கோடி டாலர் செலவிட திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எங்கள், ‘ஆப்’ மூலம் உடனடியாக நட்பு கிடைத்து விடும் என்று, உறுதி கூற மாட்டோம். இருப்பினும், வாடிக்கையாளரை சுற்றியுள்ள தொடர்புகளின் அறிமுகம் கிடைக்கும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|