பதிவு செய்த நாள்
26 மே2016
00:23

பெங்களூரு : அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம், 9,200 படுக்கைகளுடன் கூடிய, 64 மருத்துவமனைகளை நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனம், அதன் கடன்களை குறைத்து, வருவாயை பெருக்க, பாரம்பரிய முறையுடன், தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவ சேவையை வழங்க திட்டமிட்டு உள்ளது. இதன்படி, குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், ‘ஆன்லைன்’ மூலம், அந்நோய் தொடர்பான ஆலோசனைகளை, மருத்துவ நிபுணர்களிடம் இருந்து பெறலாம்; நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகளை பார்வையிடலாம். இதுபோன்ற வசதிகள் மூலம், நிறுவனத்தின் செலவை கட்டுப்படுத்தவும், அதேசமயம், நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் நாட்களை குறைக்கவும், அப்போலோ நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.‘தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவ சேவையில், நிறுவனத்தின் செலவுகள் குறையும்; நோயாளிகளும் பயன்பெறுவர்’ என, மருத்துவ துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|