பதிவு செய்த நாள்
26 மே2016
00:26

புதுடில்லி : பிராந்திய அளவிலான விமான சேவைகளை ஒருங்கிணைக்கும் நோக்குடன் துவக்கப்பட்ட, 24 விமான நிலையங்கள், விமான சேவையை மேற்கொள்ளாமல், தொடர்ந்து இழப்பை கண்டு வருகின்றன.
இந்த விமான நிலையங்கள், 2014 – 15ம் நிதியாண்டில், 100.33 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன; ஆனால், அவற்றை பராமரிக்க, இந்திய விமான போக்குவரத்து ஆணையம், 298.60 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. கடந்த ஆட்சியில், விமான போக்குவரத்து அமைச்சர், பிரபுல் படேல், பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் திறந்து வைத்த விமான நிலையம், 2012 – 15 வரையிலான மூன்று நிதியாண்டுகளில், ஒரு பைசா கூட வருவாய் ஈட்டாமல் உள்ளது. இதே காலத்தில், இதன் பராமரிப்பிற்காக, 11.50 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, 2012ல், மஹாராஷ்டிராவில், முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தன் சொந்த ஊரான ஜல்கானில் துவக்கி வைத்த விமான நிலையம், ஒரு விமான சேவையைக் கூட மேற்கொள்ளாமல் உள்ளது. பிற சேவைகளில், ஐந்து லட்சம் ரூபாய் ஈட்டி, பராமரிப்பிற்கு, 3.45 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை மேற்கொள்ளாமல், மூன்று ஆண்டுகளில், 25 லட்சம் ரூபாய் மட்டும் ஈட்டிய, சிம்லா விமான நிலையத்தின் பராமரிப்பிற்கு, 22.86 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில், ஜூஹு விமான நிலையம் மட்டும், 2014 – 15ல், பராமரிப்பு செலவான, 22.64 கோடி ரூபாயை விட, 15.22 கோடி ரூபாய் அதிகம் சம்பாதித்து, 37.86 கோடி ரூபாய் என்ற அளவில் வருவாய் ஈட்டியுள்ளது. ‘விமான சேவை நிறுவனங்களை கலந்து ஆலோசிக்காமல், அரசியல் லாபத்திற்காக துவக்கப்பட்டதால் தான், விமான நிலையங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன’ என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|