பதிவு செய்த நாள்
26 மே2016
17:47

மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக காளையின் ஆதிக்கம் நீடித்தது. அத்துடன் அதிக எழுச்சியுடன் முடிந்தது. மே மாதத்திற்கான டிரவேட்டிவ் சென்ட்டிமென்ட்டாலும், கச்சா எண்ணெய் விலை மீண்டும் 50 டாலரை தொட்டிருப்பதாலும் எண்ணெய் நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டதாலும், வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டதாலும் இன்றைய வர்த்தகம் அதிக எழுச்சியுடன் முடிந்தன. மேலும் இந்தாண்டு பருவமழை நன்றாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளதும் பங்குச்சந்தைகள் உயர காரணமாகின.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 485.51 புள்ளிகள் உயர்ந்து 26,366.68-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 134.75 புள்ளிகள் உயர்ந்து 8,069.65-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 22 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 8 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|