எல்.ஜி., நிறு­வ­னம் ­ஆ­ரம்­பிக்­கி­றது இந்­தி­யாவில் உதி­ரி­பாக தொழிற்­சாலை எல்.ஜி., நிறு­வ­னம் ­ஆ­ரம்­பிக்­கி­றது இந்­தி­யாவில் உதி­ரி­பாக தொழிற்­சாலை ... சுயஉத­வி­ கு­ழுவின் வாராக்கடன்; ரிசர்வ் வங்கி கண்­கா­ணிக்க உத்­த­ரவு சுயஉத­வி­ கு­ழுவின் வாராக்கடன்; ரிசர்வ் வங்கி கண்­கா­ணிக்க உத்­த­ரவு ...
கார்­களை விட இரு­சக்­கர வாக­னங்கள் ‘டாப்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2016
05:14

புது­டில்லி : கார் தயா­ரிப்பு நிறு­வ­னங்­களை விட, இரு­சக்­கர வாக­னங்­களை தயா­ரிக்கும் நிறு­வ­னங்கள், நல்ல லாபத்­துடன் செயல்­பட்டு வரு­கின்­றன.
மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்­திரா, ஹுண்டாய் மோட்டார்ஸ், ஹோண்டா கார்ஸ், டொயோட்டா கிர்­லோஸ்கர், போர்டு இந்­தியா ஆகிய ஆறு கார் தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின் கடன், 2014 – 15ம் நிதி­யாண்டில், 60 சத­வீதம் உயர்ந்து, 40 ஆயி­ரத்து, 300 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.இதே காலத்தில், இரு­சக்­கர வாக­னங்­களை தயா­ரிக்கும், ஹீரோ மோட்­டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, டி.வி.எஸ்., மோட்டார்ஸ், எய்ச்சர் மோட்டார்ஸ், ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர்ஸ் இந்­தியா ஆகிய, ஐந்து நிறு­வ­னங்­களின் கடன், 50 சத­வீதம் குறைந்து, 1,082 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது.
ஆறு கார் தயா­ரிப்பு நிறு­வ­னங்கள், 1.95 லட்சம் கோடி ரூபாய் வரு­வாயில், 3,440 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்­டி­யி­ருந்­தன. இதே காலத்தில், இரு­சக்­கர வாகன நிறு­வ­னங்கள், 81 ஆயி­ரத்து, 500 கோடி ரூபாய் வரு­வாயில், 6,900 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்­டி­யுள்­ளன. கடந்த ஐந்து ஆண்­டு­களில், கார் தயா­ரிப்பு நிறு­வ­னங்கள், புதிய கார்­களை உரு­வாக்­கு­வது, உற்­பத்தி திறனை அதி­க­ரிப்­பது, விரி­வாக்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது போன்­ற­வற்­றுக்­காக, 71 ஆயிரம் கோடி ரூபாய் செல­விட்­டுள்­ளன.இதே காலத்தில், இத்­த­கைய செயல்­பா­டு­க­ளுக்கு, இரு­சக்­கர வாகன நிறு­வ­னங்கள், வெறும், 13 ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் செல­வ­ழித்­துள்­ளன.
கார் விற்­ப­னையை தீர்­மா­னிப்­பதில், தொழில் துறை, பொரு­ளா­தார வளர்ச்சி உள்­ளிட்ட அம்­சங்கள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன. இந்த நிலை, இரு­சக்­கர வாக­னங்கள் துறைக்கு இல்லை; அது, நுகர்­வோரின் தேவை மற்றும் விருப்­பத்தை சார்ந்­துள்­ளது.எனினும், வரும் ஆண்­டு­களில், தனி நபர் வருவாய் உயரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வதால், இரு­சக்­கர வாக­னங்­களை விட, கார் நிறு­வ­னங்­களின் விற்­ப­னையும், லாபமும் அதி­க­ரிக்கும் என, இத்­துறை சார்ந்­த­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)