பதிவு செய்த நாள்
30 மே2016
07:48

முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், குறைந்த விலைப்பிரிவிலான சிறிய வீடுகளுக்கு வரவேற்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. வீடு வாங்குபவர்கள் சிறிய வீடுகளை நாடுவதோடு, ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் இத்தகைய வீடுகளை கட்டுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான பிராப் டைகர், இந்தியா ரியாலிட்டி ரிப்போர்ட் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 50 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட குறைந்த விலைப்பிரிவு வீடுகளுக்கு வரவேற்பு இருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த பிரிவில் வீடுகளின் விற்பனை 52 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும், புதிய அறிமுகங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், திட்டத்தின் செலவை குறைக்க, வீடுகளின் அளவை குறைத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குடியிருப்பு மற்றும் வில்லாக்களின் அளவு சராசரியாக 3 முதல் 18 சதவீதம் குறைந்துள்ளது.தேக்கம் நிறைந்த சந்தையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய உத்திகளை நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. பொதுவாகவே, கடந்த சில ஆண்டுகளில், சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் வீடுகளின் அளவு குறைக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|