பதிவு செய்த நாள்
30 மே2016
07:51

முதலீடு என்று வரும்போது பங்குகள், பத்திரங்கள் என்றெல்லாம் தான் பலரும் யோசிக்கின்றனர். இவற்றை அலசி ஆராய்வதும், சிறந்தவற்றை தேர்வு செய்வது முக்கியம் என்றாலும், பலரும் கவனிக்கத்தவறும் முதலீடு ஒன்று இருக்கிறது. அந்த முதலீடு, ’நீங்கள்’ தான். ஆம், ஒருவர் தன் மீது செய்து கொள்ளும் முதலீடே மிகச்சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. அது மட்டும் அல்ல, முதலீட்டை பரவலாக்காமல் இருப்பது, நிதி முடிவுகளை தள்ளிப்போடுவது உள்ளிட்ட வழக்கமான முதலீட்டு தவறுகளில், தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ள தேவையான தொகையை ஒதுக்காமல் இருப்பதே மிகப்பெரிய முதலீட்டு தவறாக முன்வைக்கப்படுகிறது.
எப்படி ஏன்உங்கள் மீதே முதலீடு செய்து கொள்ளலாம் என்று சொல்வது பலருக்கு ஆச்சரியம் அளிக்க கூடியதோடு, நம் மீது நாமே முதலீடு செய்து கொள்வது எப்படி சாத்தியம் என்ற சந்தேகமும் ஏற்படலாம். தனிநபர்கள் தங்களையும், தங்கள் திறனையும் மேம்படுத்திக்கொள்வதற்காக செய்து கொள்ளும் முதலீடே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. ஒருவர், தன் மீது செய்து கொள்ளும் முதலீடு தனிப்பட்ட முறையில், தொழில்முறையில் மற்றும் பொருளாதார நோக்கில் பலன் தரக்கூடியதாக இருக்கும்.
என்ன பயன்உங்கள் மீது செய்து கொள்ளும் முதலீடு பலன் தருவதோடு உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடியதாக இருக்கும். உங்கள் திறனை அதிகரித்து நம்பிக்கையை உண்டாக்கும். இது உங்கள் எதிர்கால வாழ்க்கையையும் வளமாக்கும். புதிய வாய்ப்புகளை தேடி வரச்செய்யும்.
பப்பே பாடம்முதலீட்டு மகாராஜா வாரென் பப்பே, ஒருவர் தன் மீது செய்து கொள்ள வேண்டிய முதலீட்டை வலியுறுத்துகிறார்:* உங்கள் ஆர்வத்தை கண்டறிந்து, அது தொடர்பான கற்றல் மூலம் உங்களில் முதலீடு செய்யுங்கள். * மோசமான செலவு பழக்கங்களை கைவிடுங்கள்.* ஒரு வழிகாட்டியை நாடுங்கள்.* உங்கள் பலத்தை கண்டறியுங்கள்.* நீங்கள் சேமிக்கவும் செய்யுங்கள்.* நல்ல வாய்ப்புகளை தவறவிடாமல் இருக்கவும்.
திறனும் கல்வியும்
முதலீட்டு சாதனங்கள் பல இருப்பது போலவே, உங்கள் மீதான முதலீட்டிற்கும் பல வழிகள் இருக்கின்றன.
திறன் வளர்ச்சிஉங்களுடைய தற்போதைய திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறன் வளர்ச்சியில் கவனம் செலுத்தலாம். உங்கள் துறையில் அப்டேட்டாக இருப்பது நல்லது.
உயர் கல்விஉங்கள் துறை அல்லது பணி சார்ந்த கூடுதல் கல்வித்தகுதியை பெறுவது நல்லது. அது பட்டமாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. மாலை நேர வகுப்பாகக்கூட இருக்கலாம்.
வல்லுனராவதுதுறை சார்ந்த அனுபவத்தை வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் புத்தகங்களை வாசிப்பது, கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்வது மூலம் ஒருவர் அந்த துறையில் வல்லுனராகலாம்.
புதிய மொழிபுதிய மொழி ஒன்றை கற்றுக்கொள்ளலாம். அது கம்ப்யூட்டர் மொழியாக கூட இருக்கலாம். ஆர்வம் உள்ள பொழுதுபோக்கிலேயே கூட கவனம் செலுத்தி திறன் பெறலாம்.
ஆரோக்கியம்நீங்களே சிறந்த முதலீடு எனும்போது உங்கள் ஆரோக்கியத்தை காப்பது முக்கியம் அல்லவா? புதியவற்றை கற்பது, உடற்பயிற்சி செய்வது, உடல், உள்ளத்தை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|