பதிவு செய்த நாள்
30 மே2016
07:51

எல்லா விஷயங்களையும் தாங்களே சமாளிக்கும் ஆற்றல் பெற்றுள்ள பெண்கள் நிதி விஷயங்களை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளாமல் தயக்கம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பும் சூசே ஆர்மன், வளமான நிதி எதிர்காலத்திற்கு பணத்துடனான தங்கள் உறவை சீர்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார். இதற்கான வழிகளை விவரிக்கும் வகையில் பெண்களுக்கான பிரத்யேக நிதி வழிகாட்டி நுாலாக எழுதியுள்ள, ‘வுமன் அண்ட் மணி’ புத்தகத்தில், நிதி வெற்றியை அளிக்க கூடிய எட்டு முக்கிய குணங்களை செல்வ செழிப்பான பெண்களின் குணங்களாக விவரிக்கிறார்: சமநிலை, இணக்கம்: இணக்கமும், சமநிலையும் முக்கிய குணங்களாகும். இந்த இரண்டு குணங்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது. இது நீங்கள் நினைப்பது, உணர்வது மற்றும் பேசுவதற்கும், செயல்படுவதற்கும் இடையிலான இணக்கமான தொடர்பாகும். எண்ணம், செயல் மற்றும் பேச்சுகளை ஒரே நேர்க்கோட்டில் வைத்திருப்பது சமநிலையை அளிக்கும். துணிவு: உங்கள் தேவைக்கேற்ற புத்திசாலித்தனமான முடிவுகளை மேற்கொள்ள அறிவும், துணிவும் அவசியம். துணிச்சல் இருக்கும்போது நீங்கள் அச்சத்திற்கு அடிமையாவதில்லை.தாராளம்: சரியான நேரத்தில், சரியான ஒன்றை சரியானவருக்கு அளிப்பது தாராள பண்பாகும். கொடுப்பதில் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. நேர்மையான தன்மையுடன், எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும் போது, அது மிகுந்த திருப்தி அளிக்கிறது. எப்படி கொடுக்கிறீர்கள், எதற்காக கொடுக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கவும். மகிழ்ச்சி: வளம் மற்றும் திருப்தியை உணரும் மனநிலை இது. ஆனால், மகிழ்ச்சி என்பது ஆடம்பரம் அல்ல; இது உண்மையான வளத்தின் அவசியமாகும். மகிச்சியுடன் இருக்கும்போது, வாழ்க்கையில் உண்மையான குதுாகலத்தை உணர்கிறீர்கள். உங்கள் வாய்ப்புகள் பற்றி நம்பிக்கை கொள்ளுங்கள். அறிவு: புத்திசாலித்தனமான முடிவுகள் மேற்கொள்ள தேவையான அறிவு மற்றும் அனுபவமே உங்களுக்கான ஞானமாகும். கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் சரியானவற்றை அடையாளம் காண இது உதவுகிறது. இந்த ஆற்றல் உள்ள பெண்கள் தவறுகளை கண்டுணர்ந்து, அவற்றை சரி செய்து கொள்ள உதவுகிறது.துாய்மை: தெளிவு, துாய்மை மற்றும் துல்லியமான மனநிலை இது. எதிலும் ஒரு ஒழுங்கை பெற்றிருப்பதன் மூலம் அடையலாம். நீங்கள் வீட்டை பராமரிக்கும் விதத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை வைத்திருக்கும் விதம் வரை துாய்மையை உணர்த்துகின்றன. பில்களை செலுத்துவது முதல் கிரெடிட் கார்டு பழக்கம் வரை எல்லாவற்றிலும் ஒழுங்கை கொண்டு வாருங்கள். அழகு: மனம் மற்றும் ஆன்மாவுக்கு மகிழ்ச்சியை கொடுக்க கூடிய குணங்களே அழகை அளிக்கிறது. இது உள்ளிருந்து ஒளிர்வதாகும். இந்த மற்ற குணங்களை பெற்றிருப்பதன் மூலம் அழகு மற்றும் நம்பிக்கை உங்களுக்குள் உண்டாகிறது. உங்களுக்குள் பாதுகாப்பாக உணருங்கள். உங்களுக்குள் ஆற்றல் இருப்பதை உணருங்கள். இந்த குணங்களின் சமநிலையை உணரும்போது உண்மையான செல்வத்தையும், வளத்தையும் உணர முடியும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|