பதிவு செய்த நாள்
30 மே2016
07:52

மி யூச்சுவல் பண்ட் எனப்படும் பரஸ்பர நிதிகள் சிறந்த முதலீட்டு சாதனங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன. பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய தயக்கம் கொண்டவர்களுக்கு, மியூச்சுவல் பண்ட் ஏற்றதாக இருக்கிறது.
பல முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்படும் பணம், அவர்களின் சார்பில் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தால் சமபங்குகள் உள்ளிட்ட சாதனங்களில் முதலீடு செய்யப்பட்டு அதன் பலன், உறுப்பினர்களுக்கு அவர்கள் முதலீட்டிற்கு ஏற்ப பிரித்து அளிக்கப்படுகிறது. மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் தொடர்பாக பரவலாக விழிப்புணர்வு இருந்தாலும் கூட, முதலீட்டாளர்கள் மனதில், இவை பற்றி பல தவறான அபிப்ராயங்களும் பதிந்துள்ளன.
நிபுணத்துவம் தேவைமியூச்சுவல் பண்ட் திட்டங்களை அலசி ஆராய வேண்டும், முதலீடு தேர்வுகளை கவனிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லப்படுவதால் நிதி விஷயங்களை கரைத்து குடித்திருந்தால் மட்டுமே இதில் முதலீடு செய்வது சரியாக இருக்கும் என பலரும் நினைக்கின்றனர். ஆனால், மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய, நிதி வல்லுனராக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. திட்ட நிர்வாகத்தை பண்ட் மேனேஜர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
சமபங்கு மட்டும் தான்!மியூச்சுவல் பண்ட், சமபங்குகள் சார்ந்தது என்பதாலேயே பலர் எதற்கு ரிஸ்க் என ஒதுங்கி விடுகின்றனர். மியூச்சுவல் பண்ட்கள் நஷ்டத்தை பரவலாக்கி பாதிப்பை குறைக்கும் அம்சம் கொண்டிருக்கின்றன என்பதோடு, இவை சமபங்குகளில் மட்டுமே முதலீடு செய்வதில்லை. கடன் பத்திரங்கள், சேமிப்பு பத்திரங்கள், வருமானம், ரொக்கம் என பல அம்சங்கள் உள்ளன.
பெரும் தொகை தேவைமியூச்சுவல் பண்ட் பற்றி நன்கு அறிந்திருந்தாலும் கூட பலரும் கையில் பெரும் தொகை இருந்தால் மட்டுமே அவற்றில் முதலீடு செய்யலாம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு இல்லை. சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் எனப்படும் சிப் திட்டங்களில் சிறுசேமிப்பு போல முடிந்த தொகையை முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து துவங்கும் திட்டங்கள் கூட இருக்கின்றன. சிறு முதலீட்டாளர்களுக்கு இந்த வகை திட்டங்கள் மிகவும் ஏற்றவை.
குறைந்த என்.ஏ.வி.,மியூச்சுவல் பண்ட் எனும்போது யூனிட்களாக வாங்குவது, அவற்றின் என்.ஏ.வி., மதிப்பை கவனிப்பது போன்றவை முக்கியமானது. குறைவான என்.ஏ.வி., இருந்தால் பலன் அதிகமாக இருக்கும் என்ற கருத்தும் இருக்கிறது. ஆனால், திட்டத்தின் பலன் சந்தை சார்ந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என்.ஏ.வி., ஒரு காரணி தான்.
நீண்ட கால முதலீடுமியூச்சுவல் பண்ட்கள் நீண்ட கால நோக்கில் நல்ல பலன் தரக்கூடியவை. அதற்காக நீண்ட காலத்திற்கு தான் அவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்றில்லை, குறுகிய கால முதலீட்டிற்கு ஏற்ற திட்டங்களும் இருக்கின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|