மே மாதம் கார் விற்­பனை சரிவுமே மாதம் கார் விற்­பனை சரிவு ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.67.23 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.67.23 ...
‘மேக் இன் இந்­தியா’ திட்டம்; சவால்­களை சமா­ளிக்க திணறும் இந்­திய தயா­ரிப்பு துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2016
07:38

புது­டில்லி: இந்­தி­யாவின் தயா­ரிப்பு துறை சந்­தித்து வரும் கடு­மை­யான சவால்கள் கார­ண­மாக, பிர­தமர் மோடியின் கனவுத் திட்­ட­மான, ‘மேக் இன் இந்­தியா’ திட்டம், எதிர்­பார்த்த வெற்­றியை பெறுமா என்­பது கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது.
மத்­திய அரசு, அன்­னிய முத­லீ­டுகள் மூலம், உள்­நாட்டு உற்­பத்­தியை ஊக்­கு­விக்கும் நோக்கில், ‘மேக் இன் இந்­தியா’ திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. ‘இத்­திட்­டத்தில், அரசின் இலக்கை எட்­டு­வ­தற்கு தடை­யாக, தயா­ரிப்பு துறை, பல்­வேறு சிக்­கல்­களை சந்­தித்து வரு­கி­றது’ என, பி.எம்.ஐ., நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
அதன் விவரம்:பல­வீ­ன­மான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­திகள், இந்­திய தயா­ரிப்பு துறையின் செயல்­பாட்­டிற்கு இடை­யூ­றாக உள்­ளன. போது­மான அள­விற்கு, ரயில் போக்­கு­வ­ரத்தில் ஒருங்­கி­ணைப்பு வச­திகள் இல்லை. அதனால், நிலக்­கரி மற்றும் இறக்­கு­மதி செய்­யப்­படும் மூலப் பொருட்­களை, புற­நகர் பகு­தி­களில் உள்ள தொழிற்­சா­லை­க­ளுக்கு விரைந்து எடுத்துச் செல்ல முடி­யாத நிலை உள்­ளது. மின் வினி­யோ­கத்தை மேலும் சீர­மைக்க வேண்டும். 2013 முதல், தொழிற்­சா­லைகள், மின் இணைப்­பிற்­காக காத்­தி­ருக்கும் காலம் குறைந்­துள்­ளது. தற்­போது, தொழிற்­சா­லை­க­ளுக்கு, 90 நாட்­களில் மின் இணைப்பு வழங்­கப்­ப­டு­கி­றது. இதுவும் மிக அதிகம் தான். இதை, மேலும் குறைக்க வேண்டும்.
எண்­ணற்ற கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக, தொழிற்­சா­லை­க­ளுக்கு தேவை­யான நிலத்தை கைய­கப்­ப­டுத்­து­வதில், தயா­ரிப்பு துறை கடும் சவால்­களை சந்­தித்து வரு­கி­றது. தொழி­லாளர் சார்ந்த பிரச்­னை­களும் உள்­ளன. இது போன்ற சிக்­கல்­க­ளுக்கு தீர்வு காண, மத்­திய அரசு முயற்­சித்து வரு­கி­றது. எனினும், ராஜ்­ய­ச­பாவில், போது­மான பெரும்­பான்மை இல்­லா­ததால், சீர்­தி­ருத்­தங்­களை அமல்­ப­டுத்த முடி­யாத நிலையில், மத்­திய அரசு உள்­ளது. இப்­பி­ரச்­னைகள் தொடர்­பாக, பிராந்­திய கட்­சி­க­ளி­டையே மத்­திய அரசு பேச்சு நடத்தி, ஒரு­மித்த கருத்தை ஏற்­ப­டுத்த வேண்டும். அது, உட­ன­டி­யாக நடை­பெறக் கூடிய சாத்­தியம் இல்லை.
இது­போன்ற சிக்­கல்­களால், தயா­ரிப்பு துறையில், புதிய முத­லீ­டுகள் குவி­வதில் மந்­த­நிலை காணப்­ப­டு­கி­றது. ஏற்­க­னவே செயல்­பட்டு வரும் நிறு­வ­னங்­களும், அவற்றின் விரி­வாக்கத் திட்­டங்­களை தள்ளி வைத்­துள்­ளன. இத்­த­கைய சூழல் கார­ண­மாக, தயா­ரிப்பு துறையில், ஜாம்­ப­வான்­க­ளாக விளங்கும் சீனா மற்றும் ஜெர்­ம­னிக்கு நிக­ராக, இந்­தியா உரு­வெ­டுப்­பது தாம­த­மாகும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)