பதிவு செய்த நாள்
04 ஜூன்2016
07:41
புதுடில்லி : இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், உணவு பொருட்கள், அழகு சாதன பொருட்கள் வணிகத்தை தனித்தனியாக பிரிக்க திட்டமிட்டு உள்ளது. இந்தியாவில், எப்.எம்.சி.ஜி., துறையில், இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம், சோப்பு, குளிர்பானம், உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, யுனிலீவர், உணவு பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனையை, தனித்தனியாக பிரிக்க திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து, அழகு சாதன பொருட்கள் பிரிவு செயல் இயக்குனராக சுதீர் சீதாபதி என்பவரை நியமித்து உள்ளது. ‘ஏற்கனவே, உணவு மற்றும் அழகு சாதன பொருட்கள் பிரிவுகளின் செயல் இயக்குனராக உள்ள கீது வர்மா, அதே பதவியில் தொடர்வார். தனித்தனியாக பிரிப்பதன் மூலம், பொருட்கள் விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்’ என்று, நிறுவன தரப்பில் சொல்லப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|