விரைவில் ‘தேசிய பெர்மிட் டாக்சி கொள்கை’விரைவில் ‘தேசிய பெர்மிட் டாக்சி கொள்கை’ ... தங்கம் விலையில் அதிரடி : சவரனுக்கு ரூ.440 உயர்வு தங்கம் விலையில் அதிரடி : சவரனுக்கு ரூ.440 உயர்வு ...
நுகர்வோர் சந்­தையில் ஆதிக்கம்: பெருகும் இளைய சமு­தா­யத்தை சமா­ளிக்க வேலைவாய்ப்பை உரு­வாக்க வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2016
07:43

புது­டில்லி : ‘இந்­தி­யாவில், இளைய சமு­தா­யத்­தினர் வேக­மாக பெருகி வரு­வ­தற்­கேற்ப, வேலை­வாய்ப்­பு­களை விரை­வாக உரு­வாக்க வேண்டும்’ என, ‘கோல்டு மேன் சாக்ஸ்’ நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
அதன் விவரம்: இந்­தியா, வலி­மை­யான இளைஞர் பட்­டா­ளத்தைக் கொண்ட நாடாக விளங்­கு­கி­றது. இளையோர் எண்­ணிக்கை வேக­மாக பெருகி வரு­வ­தற்­கேற்ப, மேம்­பட்ட கல்வி பயின்று வரு­வோரின் எண்­ணிக்­கையும், அதி­க­ரித்து வரு­கி­றது. அதனால், அத்­த­கை­யோ­ருக்­கான வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்கும் மிகப் பெரிய பொறுப்பும், கட­மையும், ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு உள்­ளது. சிறப்­பான கல்வி அறி­வுடன், நல்ல ஊதி­யத்தில் பணி­யாற்றும் இளைய சமு­தா­யத்­தி­ன­ரிடம், வாங்கும் சக்தி அதி­க­ரித்து வரு­கி­றது.அதன் விளை­வாக, அடுத்த 20 ஆண்­டு­களில், இந்­தியா, மிகப் பெரிய நுகர்வோர் சந்­தை­யாக உரு­வெ­டுக்கும். கடந்த, 2015ம் ஆண்டு நில­வ­ரப்­படி, இந்­தி­யாவின் தனி­நபர் வருவாய், 1,650 டால­ராக உள்­ளது. இது, 2005ல், சீனாவின் தனி­நபர் வரு­வாய்க்கு நிக­ரா­ன­தாகும்.
இந்­நி­லையில், பெரு­கி­வரும் இளை­ஞர்­க­ளுக்கு ஏற்ப, வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வதன் மூலம், வரும் ஆண்­டு­களில், இந்­தி­யாவின் தனி­நபர் வருவாய், குறிப்­பி­டத்­தக்க வகையில் உயரும். மக்கள் தொகையில், நகர்ப்­புற மத்­திய வகுப்பைச் சேர்ந்த, 2.70 கோடி பேரின், ஆண்டு வருவாய், 11,000 டால­ராக உயரும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இந்­தி­யாவில், 2000ம் ஆண்டு வாக்கில், வாலிப வயதை எட்­டிய, 44 கோடி பேரும், அதன் பின் பிறந்த, 39 கோடி பேரும், தான், இந்­திய நுகர்வோர் சந்­தையின் போக்கை தீர்­மா­னிப்­ப­தாக, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இத்­த­கை­யோரின் எண்­ணிக்கை உயர்­விற்­கேற்ப, நுகர்­பொ­ருட்­க­ளுக்­கான தேவை அதி­க­ரிக்கும். அதற்­கேற்ப, இத்­துறை நிறு­வ­னங்கள், முத­லீட்டு திட்­டங்­களை வகுக்க வேண்டும்.
இந்­தி­யாவில், அரசு துறை­களில் வேலை­வாய்ப்பு குறைந்து வரு­கி­றது. ஐ.டி., துறை­யிலும், அதிக ஊதியம் தரும் போக்கு மறைந்து வரு­கி­றது. இத்­த­கைய சூழலில், சேவைத் துறையில், குறிப்­பாக, உணவு, சரக்கு போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட பிரி­வு­களில், வேலை­வாய்ப்­புகள் அதி­க­ரித்து வரு­வது ஆறுதல் அளிக்­கி­றது. அடுத்த ஐந்து ஆண்­டு­களில், இந்­திய நகர்ப்­பு­றங்­களில், படித்த இளை­ஞர்கள் மற்றும் தொழி­லா­ளர்­களின் எண்­ணிக்கை வெகு வேக­மாக உயரும். இவ்­வாறு அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
சிறப்­பான கல்வி அறி­வுடன், நல்ல ஊதி­யத்தில் பணி­யாற்றும் இளைய சமு­தா­யத்­தி­ன­ரிடம், வாங்கும் சக்தி அதி­க­ரித்து வரு­கி­றது. அதன் விளை­வாக, அடுத்த 20 ஆண்­டு­களில், இந்­தியா, மிகப் பெரிய நுகர்வோர் சந்­தை­யாக உரு­வெ­டுக்கும்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)