அமேசான் – அஞ்சல் துறை சிறப்பு தபால்­தலை வெளி­யீடுஅமேசான் – அஞ்சல் துறை சிறப்பு தபால்­தலை வெளி­யீடு ... ராணுவ தள­வா­டங்கள் தயா­ரிப்பு:குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்குபிர­கா­ச­மான வர்த்­தக வாய்ப்பு ராணுவ தள­வா­டங்கள் தயா­ரிப்பு:குறு, சிறு, நடுத்­தர ... ...
பெட்ரோல் விற்­பனை: அன்­னிய நிறு­வ­னங்கள் ஆர்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2016
02:09

புது­டில்லி;இந்­தி­யாவில் பெட்ரோல், டீசல் சில்­லரை விற்­ப­னையில் கள­மி­றங்க, வெளி­நா­டு­களைச் சேர்ந்த பல எண்ணெய் நிறு­வ­னங்கள் ஆர்­வ­மாக உள்­ளன. சவுதி அரே­பி­யாவைச் சேர்ந்த, சவுதி அரம்கோ, இந்­தி­யாவில், பெட்ரோல், டீசல் விற்­பனை நிலை­யங்­களை அமைக்க திட்­ட­மிட்­டுள்­ளது. பிரிட்டீஷ் பெட்­ரோ­லியம் நிறு­வனம், இந்­தி­யாவில் விமான எரி­பொருள் விற்­ப­னையில் ஈடு­பட உள்­ளது. இதற்கு உரிமம் வழங்க, பெட்­ரோ­லிய துறை ஒப்­புதல் அளித்­துள்­ளது.
இந்­தி­யாவில் சிறிய அளவில், பெட்ரோல், டீசல் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரும், பிரான்சின், டோட்டல், நெதர்­லாந்தின், ஷெல் ஆகி­யவை, விரி­வாக்க திட்­டத்தை மேற்­கொள்ள உள்­ளன. பெட்ரோல், டீசல் மீதான விலைக்­கட்­டுப்­பாடு நீக்­கப்­பட்­டுள்­ளதால், அவற்றின் விற்­ப­னையில், பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் கொழுத்த லாபம் ஈட்டி வரு­கின்­றன. இந்­தி­யாவில், கச்சா எண்­ணெய்க்­கான தேவை, இந்­தாண்டின் முதல் காலாண்டில், மிகவும் அதி­க­ரித்­துள்­ளது. ‘கச்சா எண்ணெய் பயன்­பாட்டில், இந்­தியா, சீனாவை விஞ்சும்’ என, சர்­வ­தேச எரி­சக்தி முகமை சமீ­பத்­திய அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது­போன்ற அம்­சங்­களை கருத்தில் கொண்டு, பன்­னாட்டு எண்ணெய் நிறு­வ­னங்கள் இந்­தி­யாவில் வர்த்­த­கத்தை துவக்க ஆர்­வ­மாக உள்­ளன.
உள்­நாட்டில், ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில் ஆகிய நிறு­வ­னங்­களும், மீண்டும், பெட்ரோல், டீசல் விற்­ப­னையை துவக்கி உள்­ளன. நாடு முழு­வதும் மேலும் பல விற்­பனை நிலை­யங்­களை துவக்க உள்­ளன. எஸ்ஸார் ஆயில் நிறு­வ­னத்தில், ரஷ்­யாவின் ரோஸ்நெப்ட் நிறு­வனம், 49 சத­வீத பங்­கு­களை வாங்கி, இந்­திய எண்ணெய் துறையில் கால் பதிக்க உள்­ளது. இதற்­கான பேச்சு நடை­பெற்று வரு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)