பெட்ரோல் விற்­பனை: அன்­னிய நிறு­வ­னங்கள் ஆர்வம்பெட்ரோல் விற்­பனை: அன்­னிய நிறு­வ­னங்கள் ஆர்வம் ... எல் அண்டு டி இன்­சூரன்ஸ் நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்தும் எச்.டி.எப்.சி., எர்கோ எல் அண்டு டி இன்­சூரன்ஸ் நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்தும் எச்.டி.எப்.சி., ... ...
ராணுவ தள­வா­டங்கள் தயா­ரிப்பு:குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்குபிர­கா­ச­மான வர்த்­தக வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2016
02:11

சென்னை;‘பாது­காப்பு துறையில், ராணுவ தள­வா­டங்கள் உட்­பட, பல்­வேறு சாத­னங்கள், கரு­விகள் தயா­ரிப்பில், குறு, சிறு மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு பிர­கா­ச­மான வர்த்­தக வாய்ப்பு உள்­ளது’ என, இத்­துறை வல்­லு­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.சென்­னையில், இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பின் சார்பில், ‘பாது­காப்பு துறையில் தயா­ரிப்பு தொழில்­நுட்பம் மற்றும் உள்­நாட்டு வர்த்­தக வாய்ப்பு’ குறித்த கருத்­த­ரங்கு நடை­பெற்­றது. இதில், பாது­காப்பு துறை சார்ந்த வல்­லு­னர்கள் கலந்து கொண்டு பேசினர்.
சஞ்சய் கர்க், இணை செயலர், பாது­காப்பு அமைச்­ச­கத்தின் தயாரிப்பு பிரிவு: கடந்த இரண்டு ஆண்­டு­களில், பாது­காப்பு துறையில் தனி­யாரின் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்க, மத்­திய அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. இத்­துடன், அன்­னிய முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. பாது­காப்பு துறையில், அன்­னிய நேரடி முத­லீடு, 49 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.
ராணுவ தள­வாட தொழிற்­சா­லைகள் அமைப்­பது உள்­ளிட்ட பல்­வேறு நடை­மு­றைகள் எளி­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன. ராணுவ சாத­னங்கள் இறக்­கு­மதி தொடர்­பான விதி­மு­றைகள், குறு, சிறு மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு பயன் அளிக்கும் வகையில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. இது, உள்­நாட்டில் உள்ள, குறு, சிறு மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு சிறப்­பான வர்த்­தக வாய்ப்பை ஏற்­ப­டுத்தி கொடுத்­துஉள்­ளது.
ராணுவ உதி­ரி­பா­கங்கள்ஏற்­று­மதி, குறிப்­பி­டத்­தக்க வகையில் அதி­க­ரித்­துள்­ளது. ஜெயகர் கிருஷ்­ண­மூர்த்தி, தலைவர், நிர்­வாக இயக்­குனர், யுகால் பியூயல் சிஸ்டம்ஸ்: பாது­காப்பு துறை, இந்­திய தொழில் துறைக்கு மிகச் சிறந்த வர்த்­தக வாய்ப்பை வழங்­கி­யுள்­ளது. இத்­து­றையில், 5,000 கோடி டாலர் அள­விற்கு செல­வி­டப்­படும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கடந்த எட்டு ஆண்­டு­களில், பாது­காப்பு துறைக்­கான பட்ஜெட் ஒதுக்­கீடு, 12 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.இந்­திய நிறு­வ­னங்­களின் முக்­கிய பங்­கு­தா­ர­ராக, அன்­னிய நிறு­வ­னங்கள் இருந்த சூழல் இப்­போது இல்லை. உள்­நாட்டு நிறு­வ­னங்கள், தனிப்­பட்ட முறையில் ராணுவ சாத­னங்­களை தயா­ரிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. சர்­வ­தேச பாது­காப்பு தள­வா­டங்கள் சந்­தையில், ஜப்பான் முக்­கிய பங்கு வகிக்­கி­றது.
எஸ்.ரங்­க­ராஜன், தலைமை செயல் அதி­காரி, டாடா பேட்டர்ன்ஸ்: ராணுவ தள­வா­டங்­க­ளுக்­கான, ‘ஆர்டர்’ குறை­வா­கவும், ஒழுங்­கற்றும் இருக்­கலாம். ஆனால், தள­வா­டங்­களின் தரத்தில், எவ்­வித சம­ர­சத்­திற்கும், இடம் கொடுக்­க­கூ­டாது. குறு, சிறு மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்கள் இந்த வாய்ப்பை பயன்­ப­டுத்தி, அவற்றின் செயல்­பா­டு­களில் ஒழுக்­கத்­தையும், பொருட்­களின் தரத்தை பரா­ம­ரிப்­பதில் மிகுந்த கவ­னத்­தையும் செலுத்­தினால், மிகச் சிறப்­பான வருவாய் ஈட்­டலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)