பதிவு செய்த நாள்
07 ஜூன்2016
05:10
புதுடில்லி : நெட்பிளிக்ஸ் நிறுவனம், இந்தியாவில் தயாராகும் ‘சீரியல்’களை வெளியிட உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம், இணையதளம் மற்றும் மொபைல்போன்கள் மூலம் வீடியோ நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. உலகம் முழுவதும், இந்த நிறுவனத்திற்கு, 7.50 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த ஜன., மாதம், இந்தியாவில் சேவையை துவக்கிய நெட்பிளிக்ஸ், தற்போது, இந்தியாவிலேயே தயாராகும் சீரியல்களை திரையிட முடிவு செய்துள்ளது. அதன்படி, நெட்பிளிக்ஸ், பேன்டம் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, புகழ்பெற்ற விக்ரம் சந்த்ரா எழுதி அதிகளவில் விற்பனையான, ‘புனித விளையாட்டுகள்’ என்ற நாவலை, சீரியலாக ஒளிபரப்ப உள்ளது. இதைத் தொடர்ந்து, பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க, அந்த நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|