பதிவு செய்த நாள்
08 ஜூன்2016
07:34

புதுடில்லி : எல் அண்டு டி நிறுவனம், கத்தார் நாட்டில், விளையாட்டு மைதானம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பெற்று உள்ளது. உலக நாடுகளில், இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்வதில், கத்தார் முன்னணியில் உள்ளது. இந்த நாட்டு அரசு, 2022 உலக கோப்பை போட்டியை நடத்துவதற்கான மைதானத்தை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தத்தை, 13.50 கோடி டாலரில் கட்ட உள்ள விளையாட்டு மைதானத்தில், 40 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை காண முடியும். இதுகுறித்து, கத்தார் நாட்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘உலககோப்பை போட்டிக்கான அல் ராயான் மைதானத்தை, எல் அண்டு டி நிறுவனம் அமைத்து கொடுக்க இருக்கிறது’ என்றார். தற்போது, கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், ஐக்கிய அரபு நாடுகளில், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|