பதிவு செய்த நாள்
08 ஜூன்2016
07:35

புதுடில்லி : மொபைல்போனில், ‘கால் டிராப்’ எனப்படும் துண்டிக்கப்படும் அழைப்புகள் தொடர்பான பிரச்னை குறித்து விவாதிக்க, மத்திய தொலைத்தொடர்பு செயலர் ஜே.எஸ்.தீபக் தலைமையில், வரும், 10ம் தேதி டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், ஏர்டெல், வோடபோன் உட்பட, அனைத்து மொபைல்போன் சேவை நிறுவனங்களின் தலைமை செயலர்கள் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில், ‘கால் டிராப்’ பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளருக்கு, மொபைல் போன் சேவை நிறுவனங்கள், துண்டிக்கப்படும் அழைப்பு ஒன்றுக்கு 1 ரூபாய் வீதம், ஒரு நாளைக்கு, அதிகபட்சமாக 3 ரூபாய் வழங்க வேண்டும் என, ‘டிராய்’ உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, மொபைல்போன் நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘டிராய்’ உத்தரவை ரத்து செய்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|