பதிவு செய்த நாள்
08 ஜூன்2016
07:36

புதுடில்லி : ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஏர்செல் இடையிலான ஒப்பந்தம், இம்மாத இறுதியில் கையெழுத்தாகும் என, தெரிகிறது. இந்தியாவில், தொலைத்தொடர்பு சேவையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், நான்காவது பெரிய நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம், ஏர்செல் நிறுவனத்துடன் இணைந்து, 50:50 என்ற கூட்டுடன் செயல்பட முடிவு செய்து உள்ளது. இந்த ஒப்பந்தம், இம்மாத இறுதியில் கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இரு நிறுவனங்களும், 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்டும் என, தெரிகிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், தன் மொபைல் டவர், ‘ஆப்டிக் பைபர்’ போன்ற தொலைதொடர்பு சாதனங்களை, டில்மான் குளோபல் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்திற்கு விற்க உள்ளது. ஏர்செல் ஒப்பந்தம் முடிந்த பின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் கடன் நெருக்கடி பெருமளவு குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|