பதிவு செய்த நாள்
08 ஜூன்2016
07:36

புதுடில்லி : ‘கடந்த, இரு ஆண்டுகளாக கடும் நெருக்கடியில் இருந்த உருக்குத் துறை, மத்திய அரசின் நடவடிக்கை களால் எழுச்சி பெறத் துவங்கிஉள்ளது’ என, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ மற்றும், ‘ஐ.சி.ஆர்.ஏ.,’ தர நிர்ணய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, அவை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தொகுப்பு: உலகளவில், உருக்கு விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி, மலிவு விலை உருக்கு பொருட்களின் இறக்குமதி அதிகரிப்பு, உள்நாட்டில் உருக்கு பொருட்களுக்கான தேவை குறைந்தது போன்றவற்றால், செயில், டாட்டா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் உள்ளிட்ட முன்னணி உருக்கு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
லாபப் பாதை...இந்நிலையில், மத்திய அரசு, 170க்கும் மேற்பட்ட உருக்கு பொருட்களின் இறக்குமதிக்கு, குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்தது. அதனால், 2015 – 16ம் நிதியாண்டில், உருக்கு இறக்குமதி, 15.5 சதவீதம் சரிவடைந்து, 6.54 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதனிடையே, முடங்கிக் கிடந்த அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை உயிர்ப்பிக்கும் நடவடிக்கைகளை, மத்திய அரசு முடுக்கி விட்டதால், உருக்கு பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ரயில்வே துறையின், மூலதனச் செலவினங்கள், 65 சதவீதம்உயர்ந்துள்ளதன் காரணமாகவும், உருக்கு தேவை அதிகரித்துள்ளது.
இதனிடையே, சர்வதேச சந்தையில் உருக்கு விலை அதிகரித்ததை அடுத்து, உள்நாட்டு நிறுவனங்களும், உருக்கு விலையை, 25 சதவீதம் உயர்த்தியுள்ளன. இதுபோன்ற காரணங்களால், இந்தாண்டு, ஜன., – மார்ச் வரையிலான காலாண்டில், முன்னணி உருக்கு நிறுவனங்கள், இரு ஆண்டுகளுக்குப் பின், லாபப் பாதைக்கு திரும்பியுள்ளன. இது ஆரோக்கியமான போக்கு என்ற போதிலும், உருக்கு துறைக்கு மேலும் பல பிரச்னைகள் உள்ளன.
சீன அபாயம்குறிப்பாக, தனியார் துறையில், 20 சதவீதத்திற்கும் அதிகமான முதலீட்டு திட்டங்கள் முடங்கியுள்ளன. அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.வரும் ஆகஸ்டில், உருக்கு இறக்குமதி விலை நிர்ணயக் கொள்கையை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய உள்ளது. அப்போது, உருக்கு துறையில், ஒருசாராரின் கோரிக்கைப்படி, இறக்குமதி விலை உத்தரவை திரும்பப் பெற்றால், மீண்டும், சீனாவின் மலிவு விலை உருக்கு பொருட்கள், இந்தியாவில் குவியும் அபாயம் உள்ளது.
* கடந்த, 2015 – 16ம் நிதிஆண்டில், உள்நாட்டின் உருக்கு தேவை, 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது* உருக்கு துறை மேம்பாட்டு திட்டங்கள் குறித்து, உருக்கு அமைச்சகம் தயாரித்துள்ள வரைவறிக்கை, விரைவில், பிரதமரிடம் வழங்கப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|