பதிவு செய்த நாள்
09 ஜூன்2016
04:35
லண்டன் : பிரிட்டன் தொழில் துறை உற்பத்தி, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஏப்ரலில், 2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, மார்ச்சில், 0.3 சதவீதமாக இருந்தது. ஒரே மாதத்தில் இந்த அளவிலான வளர்ச்சி, இறுதியாக, கடந்த, 2012 ஜூலையில் தான் காணப்பட்டது என, பிரிட்டன் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்து உள்ளது. இந்த வேகமான வளர்ச்சிக்கு, மருந்து, கார் மற்றும் எரிவாயு துறைகள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன. அதேசமயம், இதர துறைகளின் உற்பத்தி, தேக்க நிலையிலேயே உள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது குறித்து, வரும் 23ம் தேதி, பிரிட்டனில் பொது ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில், மந்த நிலையில் இருந்த பிரிட்டன் தொழில் துறையின் உற்பத்தி, கடந்த ஏப்ரலில், சிறப்பான வளர்ச்சி கண்டுள்ள புள்ளிவிவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|