சேவை துறைக்கு ‘வர்த்­தக வசதி ஒப்­பந்தம்’சேவை துறைக்கு ‘வர்த்­தக வசதி ஒப்­பந்தம்’ ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு:ரூ.66.58 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு:ரூ.66.58 ...
உலக வங்கி மறுமதிப்­பீடு; இந்­தி­யாவின் பொரு­ளா­தார வளர்ச்சி 7.6 சத­வீ­த­மாக குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2016
04:37

புது­டில்லி : ‘ ஒரு சில இடர்­பா­டு­களால், நடப்பு மற்றும் வரும் நிதி­யாண்­டு­களில், இந்­திய பொரு­ளா­தாரம், 7.6 – 7.7 சத­வீதம் என்ற அளவில் குறைய வாய்ப்­புள்­ளது’ என, உலக வங்கி தெரி­வித்­துள்­ளது.
இதே காலத்தில், இந்­திய பொரு­ளா­தாரம், 7.9 சத­வீதம் வளர்ச்சி காணும் என, இந்­தாண்டு ஜன­வ­ரியில், உலக வங்கி தெரி­வித்­தி­ருந்­தது. இதில், தற்­போது, 0.3 சத­வீதம் குறைக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கான கார­ணங்­களை, உலக வங்கி பட்­டி­ய­லிட்­டுள்­ளது.
அதன் விவரம்:கடந்த, 2015 ஜன­வரி முதல், 2016 ஏப்ரல் வரை, ரிசர்வ் வங்கி, ஐந்து முறை, வங்­கி­க­ளுக்கு வழங்கும் குறு­கிய கால கடன்­க­ளுக்­கான, ‘ரெப்போ’ வட்­டியை, 1.50 சத­வீதம் குறைத்­தது.
தேக்க நிலைஇருந்­த­போ­திலும், தொழில்­து­றைக்­கான வங்கிக் கடன் வளர்ச்சி அதி­க­ரிக்­க­வில்லை. இதற்கு, வங்­கி ­களின் நிதி­யா­தாரம் பல­வீ­ன­மாக உள்­ள­துதான் காரணம். குறிப்­பாக, விமானம், அடிப்­படை கட்­ட­மைப்பு, உருக்கு உள்­ளிட்ட துறை­களில், வங்­கி­களின் வாராக் கடன் அதிகம் உள்­ளது. போது­மான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­திகள் இல்­லா­தது, கடு­மை­யான சுற்­றுச்­சூழல் விதி­மு­றைகள், குறை­வாக கிடைக்கும் வங்கி கடன் போன்ற பிரச்­னை­களால், தனியார் முத­லீ­டு­களில் தேக்­க­நிலை காணப்­ப­டு­கி­றது. நாட்டின் ஏற்­று­மதி வளர்ச்சி, இந்­தாண்டு பிப்­ர­வரி வரை, தொடர்ந்து 15 மாதங்­க­ளாக சரி­வ­டைந்­துள்­ளது.
கடந்த இரு ஆண்­டு­க­ளாக, பரு­வ­மழை, சரா­ச­ரியை விட, 14 சத­வீதம் குறை­வாக பெய்­துள்­ளது. இதனால், கிரா­மப்­புற மக்­களின் நிதி­யா­தாரம் பாதிக்­கப்­பட்டு, பொருட்கள் வாங்­கு­வது குறைந்­துள்­ளது. இது­போன்ற கார­ணங்­களால், இந்­தி­யாவின் பொரு­ளா­தார வளர்ச்சி, முந்­தைய மதிப்­பீட்டை விட, 0.3 சத­வீதம் குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.இருந்­த­போ­திலும், இந்­தியா, வேக­மான பொரு­ளா­தார வளர்ச்­சியில், இதர வளரும் நாடு­களை விட, முன்­னி­லையில் உள்­ளது. இது, அடுத்த மூன்று ஆண்­டு­க­ளுக்கு தொடரும். இந்­தாண்டு, பரு­வ­மழை நன்கு பெய்­யும்­பட்­சத்தில், வேளாண் உற்­பத்தி அதி­க­ரித்து, கிரா­மப்­புற மக்­களின் வரு­வாயும், செல­வி­னமும் உயரும்.
‘மேக் இன் இந்­தியா’அடிப்­படை கட்­ட­மைப்பு துறையில், அதிக அள­வி­லான அரசின் முத­லீ­டுகள், எளி­மைப்­ப­டுத்­தப்­பட்ட வர்த்­தக நடை­மு­றைகள், வரி சீர்­தி­ருத்­தங்கள் போன்­றவை, தனியார் முத­லீ­டு­களை ஈர்க்கக் கூடி­ய­வை­க­ளாக உள்­ளன. அன்­னிய நேரடி முத­லீட்டு விதி­மு­றைகள் தளர்த்­தப்­பட்­டதால், 2014 அக்­டோ­பரில், ‘மேக் இன் இந்­தியா’ திட்டம் அறி­மு­க­மா­னது முதல், இந்­தாண்டு பிப்­ர­வரி வரை, அன்­னிய நிறு­வ­னங்­களின் முத­லீடு, 37 சத­வீதம் வளர்ச்சி அடைந்­துள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுஉள்­ளது.
நடப்­பாண்டில், சர்­வ­தேச பொரு­ளா­தார வளர்ச்சி, 2.9 சத­வீ­த­மாக இருக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இது, மறு­ம­திப்­பீட்டில், 2.4 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்­டுள்­ளது– உலக வங்கி

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)