பதிவு செய்த நாள்
11 ஜூன்2016
07:34

புதுடில்லி : இந்தியாவில், சுலபமாக தொழில் துவங்கும் வசதியுள்ள மாநிலங்களில், பீஹார் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இம்மாநிலம், 2015ல், 21வது இடத்தில் இருந்தது. சுலபமாக தொழில் துவங்க எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து, 16 மாநிலங்கள் அளித்த விவரங்களின் அடிப்படையில், தற்காலிக பட்டியல் ஒன்றை தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சி துறை வெளியிட்டுள்ளது. இதில், பீஹார் முதலிடத்தைப் பிடித்துள்ளது.முதலிடத்தில் இருந்த குஜராத், தற்போது ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தெலுங்கானா, ஜார்க்கண்ட் மாநிலங்கள், முறையே, இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன. அடுத்த இடங்களில், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகியவை உள்ளன. இதர மாநிலங்கள் அளிக்கும் விவரங்களை ஆராய்ந்து, இறுதி பட்டியல், ஜூலையில் வெளியிடப்படும். அதில், மாநிலங்களின் இட வரிசை மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|