பதிவு செய்த நாள்
11 ஜூன்2016
07:36

மும்பை : ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், நாடு முழுவதும் பல கட்டங்களாக, ‘4ஜி’ சேவையை துவக்க உள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், இந்தியாவில் தொலை தொடர்பு சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் நாடு முழுவதும், 4ஜி தொலை தொடர்பு சேவையை துவக்க உள்ளது. இதை, பல கட்டங்களாக அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக, மும்பை, டில்லி, கோல்கட்டா, குஜராத், மஹாராஷ்டிரா, ம.பி., ஆந்திரா, உ.பி., ஆகிய மாநிலங்களில், வரும் ஆக., மாதம் முதல், 4ஜி சேவையை துவங்க உள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், 4ஜி சேவைக்காக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம், சேவைகளை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு, எட்டு நகரங்களில் சேவை வழங்குவதற்கு, தொலை தொடர்பு துறை அனுமதி தரவில்லை. இருப்பினும், இந்த அனுமதி, 10 நாட்களில் கிடைக்கும் என, தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|