பதிவு செய்த நாள்
11 ஜூன்2016
07:36

ஐதராபாத் : சிபி புட்ஸ், கோழி இறைச்சியை பதப்படுத்தும் ஆலையை, ஆந்திர மாநிலம், சித்துாரில் அமைக்க முடிவு செய்துள்ளது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த சிபி புட்ஸ் நிறுவனம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பதப்படுத்திய கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, சிபி புட்ஸ், இப்பிரிவிலும் இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக, ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில், புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்களின் சந்தை மதிப்பு, 5,000 கோடி டாலராக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த துறையில், அதிக சந்தை வாய்ப்பு உள்ளது. இதனால், இந்தியாவில், பதப்படுத்திய கோழி இறைச்சி விற்பனை செய்ய, புதிய ஆலை அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|