பதிவு செய்த நாள்
11 ஜூன்2016
07:37

புதுடில்லி : விஸ்டாரா ஏர்லைன்ஸ், சாதாரண வகுப்புக்கு பயணிகளுக்கு இருக்கைகளை அதிகரிக்க உள்ளது.டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்சின் கூட்டு நிறுவனம் விஸ்டாரா ஏர்லைன்ஸ். தற்போது, 11 விமானங்களை இயக்கி வரும் விஸ்டாரா, இந்த ஆண்டு இறுதிக்குள், அதன் எண்ணிக்கையை, 13 ஆக அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. விஸ்டாரா ஏர்லைன்ஸ், சாதாரண வகுப்பு பயணிகளுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்து உள்ளது. அதன்படி, விமானங்களில், பிசினஸ் மற்றும் பிரிமியம் பிரிவில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை குறைத்து, சாதாரண பிரிவுக்கான இருக்கையை அதிகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. தற்போது, மொத்தம் உள்ள, 11 விமானங்களில், ஆறில், இருக்கை மாற்றும் பணி முடிவடைந்து உள்ளது. எஞ்சியவற்றை, வரும் ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|