பதிவு செய்த நாள்
11 ஜூன்2016
07:38

புதுடில்லி : இந்திய மருந்து துறையில், புதிய திட்டங்களில் களமிறங்கும் அன்னிய நிறுவனங்கள், 100 சதவீதம் முதலீடு மேற்கொள்ள அனுமதி உள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வரும் இந்திய மருந்து நிறுவனங்களில், 49 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற வேண்டும். இந்த விதிமுறையை தளர்த்துவது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இதன்படி, இந்திய மருந்து நிறுவனங்களில், 49 சதவீதம் வரை, மத்திய அரசின் அனுமதியின்றி, நேரடியாக அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். அதற்கு மேற்பட்ட அன்னிய முதலீடுகளுக்கு, அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை பெற வேண்டும். இந்த விதிமுறை அமலானால், இந்திய மருந்து நிறுவனங்களில், அதிக அளவில் அன்னிய முதலீடுகள் குவியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|