அடுத்த 4 ஆண்­டு­களில் வலை­தள பொருட்கள் விற்­பனை எகிறும்:   17.5 கோடி வாடிக்­கை­யாளர் இணைவர்அடுத்த 4 ஆண்­டு­களில் வலை­தள பொருட்கள் விற்­பனை எகிறும்: 17.5 கோடி ... ... முத­லீட்­டா­ளர்கள் உத்தி  எப்­படி இருக்க வேண்டும்? முத­லீட்­டா­ளர்கள் உத்தி எப்­படி இருக்க வேண்டும்? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உங்கள் பண சிந்­தனை என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
07:32

பணத்தை சரி­யாக நிர்­வ­கிப்­பது என வரும் போது முதலில் பணத்­திற்கும் உங்­க­ளுக்­கு­மான உறவை தெளி­வாக அறிந்­தி­ருக்க வேண்டும் என்­கின்­றனர், ஜோசப் போயெட்,- ஜிம்மி போயெட். முன்­னணி நிதி வழி­காட்­டி­களின் கோட்­பா­டு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இரு­வரும் எழு­திய, ‘தி குரு கைடு டு மணி மேேனஜ்மென்ட்’ புத்­த­கத்தில், நிதி வாழ்க்­கையை சீராக்கி கொள்ள முதலில் உங்கள் பண சிந்­த­னையை புரிந்து கொள்ள வேண்டும் என்­கின்­றனர்.நிதி வழி­காட்­டிகள் பலரும், தங்கள் கோட்­பாடு­களை பணத்­து­ட­னான உறவை புரிந்து கொள்­வதில் இருந்தே துவங்­கு­கின்­றனர். எனவே, பணம் தொடர்­பான செய­லற்ற சிந்­த­னை­களை விலக்கி, அவற்­றுக்கு பதி­லாக ஆரோக்­கி­ய­மான பண அணு­கு­முறை மற்றும் நம்­பிக்­கை­களை பெற வேண்டும். பணம் என்று வரும் போது, நீங்கள் கொண்­டுள்ள எண்­ணங்கள் உங்கள் செயலை தீர்­மா­னிக்கும்; நீங்கள் சொல்­வது உங்கள் செயலை தீர்­மா­னிக்கும்; அதுவே உங்கள் தலை­வி­தியை நிர்­ண­யிக்கும்’ என்­கிறார், முன்­னணி தனி­நபர் வல்­லு­ன­ரான சூசன் ஆர்மன்.அவரும் மற்ற நிதி வழி­காட்­டி­களும் வலி­யு­றுத்­து­வது, நீங்கள் செயல்­ப­டாத பண சிந்­த­னைகள், அணு­கு­மு­றைகள் மற்றும் நம்­பிக்­கை­களை மாற்­றிக்­கொள்ள வேண்டும் என்­பதைத் தான். ஏனெனில், அவை தான் உங்கள் செய­லற்ற பண பழக்­கங்­க­ளுக்கு கார­ண­மாக அமை­கின்­றன. செல்­வத்­திற்­கான பாதையில் தடை­யாக இருக்கும் சிந்­த­னை­களை கண்­ட­றிந்­து­விட்டால், அவற்றை செழுமை­யான எண்­ணங்­களால் மாற்றிக் கொண்டு நிதிப்­பா­தையில் முன்­னே­றலாம்.இதற்­காக பரிந்­து­ரைக்­கப்­படும் வழி­கள்...அம்மா, அப்பா வழி மீது பழி: பணம் தொடர்­பான உங்­க­ளு­டைய ஆரம்ப கால அனு­ப­வங்­களை நினைத்துப் பார்த்து, அவை எப்­படி தற்­போ­தைய பண எண்­ணங்­களை தீர்­மா­னிக்­கின்­றன என புரிந்து கொள்ளும் வழி இது. நிதி சுதந்­தி­ரத்தின் முதல் படி, கொஞ்சம் திரும்பிப் பார்த்து, பணம் பற்றி முதலில் நீங்கள் புரிந்து கொண்ட போது, அது உங்­க­ளுக்கு என்­ன­வாக இருந்­தது என்­பதை தெரிந்து கொள்­வது தான் என்­கிறார், ஆர்மன். பணம் தொடர்­பான நினை­வு­களை திரும்பிப் பார்ப்­பதன் மூலம் பணம் தொடர்­பான உங்கள் உறவை நன்­றாக புரிந்து கொள்­ளலாம். பணம் ஒரு­நபர்: இன்­னொரு வழி, பணத்தை ஒரு­ந­ப­ராக நினைத்துக் கொண்டு, அத­னு­ட­னான உறவு எப்­படி அமைந்­தி­ருக்­கி­றது என கேட்டுக் கொள்­வ­தாகும். இதன் மூலம் உங்கள் பண சிந்­தனை பற்­றிய புரி­தலும் உண்­டாகும். இவற்­றோடு, எளிய பரி­சோ­தனை ஒன்றும் உள்ளது. தினமும் காலை, உங்கள் பர்சை திறந்து பாருங்கள். அவற்றில், ரூபாய் நோட்­டு­களை எப்­படி அடுக்கி வைத்­தி­ருக்­கி­றீர்கள் என கவ­னிக்­கவும். நோட்­டுகள், அவற்றின் மதிப்­பிற்கு ஏற்ப வரி­சை­யாக அடுக்­கப்­பட்டு, உங்­களை பார்த்துக் கொண்­டி­ருக்­கு­மாறு செய்­யவும். ஏழ்­மையின் மொழி: பணம் தொடர்­பாக நீங்கள் பயன்­ப­டுத்தும் வார்த்­தைகள் மற்றும் சொற்­றொ­டர்­களை கொண்டும் பணம் தொடர்­பான எண்­ணங்­களை அறிந்து கொள்­ளலாம். பணம் தொடர்­பான வார்த்­தைகள் செல்வ சொற்­க­ளா­கவோ அல்­லது ஏழ்மை வார்த்­தை­களா­கவோ அமைந்­தி­ருப்­பதை கவ­னிக்­கலாம். ஏழ்­மை­யான வார்த்­தை­களை பயன்­ப­டுத்­தினால் ஏழ்­மை­யான சிந்­த­னை­களே இருக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)