தலைமை பொறுப்பில் பெண்கள் ; டாடா குழுமத்தின் முயற்சிதலைமை பொறுப்பில் பெண்கள் ; டாடா குழுமத்தின் முயற்சி ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.66.94 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.66.94 ...
துறை­முக நிர்­வா­கத்தில் அதி­ரடி சீர்­தி­ருத்தம்; விரைவில் புதிய மசோதா தாக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
07:43

புது­டில்லி, : மத்­திய அரசு, துறை­முக நிர்­வா­கத்தில் அதி­ர­டி­யாக பல்­வேறு சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள உள்­ளது.
முதற்­கட்­ட­மாக, 50 ஆண்­டுகள் பழ­மை­யான, துறை­முக பொறுப்பு கழக சட்­டத்­திற்கு மாற்­றாக, ‘மத்­திய துறை­முக அதி­கார அமைப்­புகள் சட்டம் – 2016’ என்ற புதிய சட்டம் கொண்டு வர முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.
வரைவு மசோதாஇதற்­கான வரைவு மசோதா, கப்பல் போக்­கு­வ­ரத்து அமைச்­ச­கத்தின் வலை­த­ளத்தில், பொது­மக்­களின் கருத்து கேட்­புக்­காக வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அக்­க­ருத்­துக்­களின் அடிப்­ப­டையில் இறுதி செய்­யப்­படும் மசோதா, மத்­திய அமைச்­ச­ரவைக் குழுவின் ஒப்­பு­த­லுடன், பார்­லி­மென்டில் நிறை­வேற்­றப்­படும்.
வரைவு மசோ­தாவில் உள்ள முக்­கிய அம்­சங்கள்:* துறை­முக பொறுப்பு கழ­கங்­களில், நிர்­வாக குழு உறுப்­பி­னர்கள் எண்­ணிக்கை, 19ல் இருந்து, ஒன்பதாக குறைக்­கப்­படும். அதில், நான்கு பேர், தனி உறுப்­பி­னர்­க­ளாக இருப்பர்* இக்­கு­ழுவில், மத்­திய அரசு மற்றும் தொழி­லா­ளர்கள் சார்பில் தலா ஒரு­வரும், மூன்று செயல் உறுப்­பி­னர்­களும் இடம் பெறுவர்* துறை­முகம் சார்ந்த பயன்­பாட்­டிற்­கான நிலத்தை, 40 ஆண்­டுகள் வரை குத்­த­கைக்கு விடும் உரிமம், துறை­முக நிர்­வாக குழு­விற்கு வழங்­கப்­படும். துறை­முகம் சாரா பணி­க­ளுக்­கான நில குத்­தகை வரம்பு, 20 ஆண்­டு­க­ளாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு மேற்­பட்ட காலத்­திற்­கான நில குத்­த­கைக்கு, மத்­திய அரசின் ஒப்­புதல் தேவை* துறை­முகப் பணி­க­ளுக்­காக கடன் பெறுதல், நிதி திரட்­டுதல், ஆலோ­ச­கர்­களை நிய­மித்தல், ஒப்­பந்­தங்­களை செயல்­ப­டுத்­துதல், சேவைக்­கான பணி­யி­டங்­களை உரு­வாக்­குதல் ஆகி­ய­வற்­றுக்கு, மத்­திய அர­சிடம் அனு­மதி பெறும் நடை­முறை நீக்கம்* அரசு மற்றும் தனியார் நிறு­வ­னங்கள் – துறை­மு­கங்கள் இடை­யி­லான கூட்டு திட்­டங்­களில் ஏற்­படும் பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காணவும், முடங்­கி­யுள்ள திட்­டங்­களை உயிர்­ப்பிப்­ப­தற்­கான பரிந்­து­ரை­களை வழங்­கவும், தனி வாரியம் ஏற்­ப­டுத்­தப்­படும். இத்­துடன் பல்­வேறு அம்­சங்கள், வரைவு மசோ­தாவில் இடம்­பெற்­றுள்­ளன.
பெரிதும் உதவும்நாட்டில் உள்ள, 12 பெரிய துறை­மு­கங்­களில், சென்னை, எண்­ணுா­ரி­லுள்ள காம­ராஜர் துறை­முகம், ‘மினி ரத்னா’ அந்­தஸ்­துடன் பொது துறை நிறு­வ­ன­மாக செயல்­பட்டு வரு­கி­றது. புதிய சட்டம் அம­லுக்கு வந்தால், இதர, 11 பெரிய துறை­மு­கங்­களும் அதிக சுய அதி­கா­ரத்­துடன் கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள் போல் செயல்­படும். மத்­திய அரசின் புதிய சட்டம், துறை­மு­கங்­களின் வளர்ச்­சிக்கு பெரிதும் உதவும் என, எதிர்­பார்க்­கப்ப­டு­கி­றது.
முக்­கிய துறை­மு­கங்கள்* கன்ட்லா* பாரதீப்* ஜே.என்.பி.டி.,* மும்பை* விசா­கப்­பட்­டினம்* சென்னை* கோல்­கட்டா* மங்­களூர்* துாத்­துக்­குடி* எண்ணுார் காம­ராஜர்* கொச்சி* மர்­ம­கோவா

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)