விற்­ப­னை­யாளர் விருப்­பத்தில் ‘அமேசான்’ முத­லிடம்விற்­ப­னை­யாளர் விருப்­பத்தில் ‘அமேசான்’ முத­லிடம் ... ரூபாயின் மதிப்பிலும் தள்ளாட்டம் – ரூ.67.18 ரூபாயின் மதிப்பிலும் தள்ளாட்டம் – ரூ.67.18 ...
வெளி­நா­டு­களில் நெருக்­கடி; இந்­திய முன்­னணி தொழில் நிறு­வ­னங்கள் உள்­நாட்டில் தீவிர கவனம் செலுத்த முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2016
07:40

மும்பை : வெளி­நா­டு­களில் தொழில்­களை விரி­வு­ப­டுத்­து­வதில் ஆர்வம் காட்டி வந்த, இந்­திய முன்­னணி நிறு­வ­னங்கள், அங்­குள்ள சாத­க­மற்ற நிலையால், சிறப்­பான வளர்ச்சி வாய்ப்­புள்ள, உள்­நாட்டு தொழிலில் தீவிர கவனம் செலுத்த திட்­ட­மிட்­டுஉள்­ளன.
இந்­த­ வ­கையில், டாடா ஸ்டீல், லார்சன் அண்டு டூப்ரோ, ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல், கிராசிம் இண்­டஸ்ட்ரீஸ், அல்ட்­ராடெக் சிமென்ட் உள்­ளிட்ட நிறு­வ­னங்கள், அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு, இந்­திய தொழில்­பி­ரி­வு­களின் வர்த்­த­கத்­திற்கு முன்­னு­ரிமை அளிக்க முடிவு செய்­துஉள்­ளன.
கடும் போட்டிதற்­போ­தைய சூழலில், உல­க­ளவில், இந்­திய பொரு­ளா­தாரம் தான், மிக வேக­மாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்­சியால்,மேற்கு ஆசிய நாடுகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. ஐரோப்­பிய நாடுகள், ஜப்பான், சீனா ஆகி­ய­வற்றின் பொரு­ளா­தார வளர்ச்­சியும் மந்­த­நி­லையில் உள்­ளது. சிறிய நாடு­களில் வலு­வாக காலுான்ற முயன்­றாலும், அங்கு, சீனா, தென் கொரியா, ஐரோப்­பிய நாடு­களைச் சேர்ந்த நிறு­வ­னங்­களின் கடும் போட்­டியை சமா­ளிக்க வேண்­டிய நிலை உள்­ளது. இத்­த­கைய சூழலில், வேக­மாகவிரி­வ­டைந்து வரும் இந்­திய சந்தை தான், லாப­க­ர­மா­னது என, உள்­நாட்டு நிறு­வ­னங்கள் உணர்ந்து கொண்­டன. அதனால், வெளி­நாட்டு தொழில்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­பதை குறைத்து வரு­கின்­றன.
டாடா ஸ்டீல் நிறு­வனம், பிரிட்­டனில் உள்ள முக்­கிய உருக்­காலை பிரி­வு­களை, கிரேபுல் கேப்­பிடல் நிறு­வ­னத்­திற்கு, குறைந்த விலைக்கு விற்­பனை செய்­துள்­ளது. மேலும் பல பிரி­வு­களை விற்க, முயற்­சித்து வரு­கி­றது. டாடா ஸ்டீல், ஒடி­சாவில், கலிங்கா நகரில் உள்ள, உருக்­கா­லையின் உற்­பத்­தியை பெருக்க, நட­வ­டிக்கை எடுக்க உள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. இந்­தாண்டின் முதல் காலாண்டில், இந்­நி­று­வ­னத்தின் மொத்த விற்­று­மு­தலில், இந்­திய பிரிவின் பங்­க­ளிப்பு, 31 சத­வீ­தத்தில் இருந்து, 35 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.
உள்நாட்டு வர்த்தகம்அதானி குழுமம், ஆஸ்­தி­ரே­லி­யாவில், ஆறு ஆண்­டு­க­ளாக தாம­தமாகி வரும் குயின்ஸ்­லாந்து நிலக்­கரி சுரங்க திட்­டத்தை கைவிட திட்­ட­மிட்­டுள்­ளது. சத்­தீஸ்கர், ஒடிசா மாநி­லங்­களில் உள்ள, நிலக்­கரி சுரங்கப் பணி­களை மேம்­ப­டுத்த முடிவு செய்­து உள்­ளது.ஆதித்ய பிர்லா குழு­மமும், அதன், அல்ட்­ராடெக் சிமென்ட்ஸ், கிராசிம் இண்­டஸ்ட்ரீஸ் உள்­ளிட்ட நிறு­வ­னங்­களின், சிமென்ட், ‘விஸ்கோஸ் பைபர்’ ஆகிய பிரி­வு­களின் விரி­வாக்கம் மற்றும் கைய­கப்­ப­டுத்தல் திட்­டங்­களை மேற்­கொள்ள முனைந்­துள்­ளது. அது­போல, லார்சன் அண்டு டூப்ரோ, ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல், ஆகிய நிறு­வ­னங்­களும், உள்­நாட்டு வர்த்­த­கத்தில் தீவிர கவனம் செலுத்த உள்­ள­தாக அறி­வித்­துள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)