பதிவு செய்த நாள்
18 ஜூன்2016
07:37
பெங்களூரு : அமேசான் நிறுவனம், விற்பனையாளர்களின் கமிஷன் தொகையை அதிரடியாக குறைத்து உள்ளது. இந்தியாவில், ‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ உள்ளிட்ட பல நிறுவனங்கள், இணையதள வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கவர, பல சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம், வாடிக்கையாளர்களின் இடங்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும் போதும், திரும்ப பெறும் போதும் அதற்கான டெலிவரி கட்டணத்தை விற்பனையாளர்களிடம் இருந்து வசூலிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு, விற்பனையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், அமேசான் நிறுவனம், ஸ்மார்ட் போன்கள், டேப்லட் சாதனங்களுக்கான விற்பனையில், விற்பனையாளர்களின் கமிஷன் தொகையை, 5 சதவீதத்தில் இருந்து, 3 சதவீதமாக குறைத்து உள்ளது. அதேபோல், சினிமா மற்றும் கல்வி சம்பந்தமான பொருட்களில், விற்பனையாளர் கமிஷனை, 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைத்து உள்ளது. அமேசான் விற்பனையில் மின்னணு சாதனங்கள் அதிகமாக விற்கின்றன. இந்நிலையில், இதற்கான கமிஷனை குறைக்க இருப்பதால், மின்னணு சாதன விற்பனையாளர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|