பதிவு செய்த நாள்
21 ஜூன்2016
00:00
புதுடில்லி : பஜாஜ் ஆட்டோ, நடுத்தர இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு, முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது. இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் பஜாஜ் ஆட்டோ, நடப்பு நிதியாண்டின், முதல் இரண்டு மாதங்களில், நடுத்தர வாகன பிரிவில், ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா ஆகிய நிறுவனங்களை விட, அதிகமாக விற்பனை செய்து உள்ளது. இதையடுத்து, நடுத்தர பிரிவு வாகன விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்த, பஜாஜ் திட்டமிட்டு உள்ளது. இந்தியாவில், நடப்பு நிதியாண்டின், முதல் இரண்டு மாதங்களில், 5.90 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகி உள்ளன. இது, முந்தைய ஆண்டின், இதே காலத்தில், 4.35 லட்சம் வாகனங்களாக இருந்தது. இதே காலத்தில், பஜாஜ் நிறுவனத்தின் விற்பனை, 84.87 சதவீதம் உயர்ந்து, 94 ஆயிரத்து, 761 என்ற எண்ணிக்கையில் இருந்து, 1.75 லட்சமாக அதிகரித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|