வாகன துறை வளர்ச்சி நிலை­யாக இருக்கும்: ‘பிட்ச்’வாகன துறை வளர்ச்சி நிலை­யாக இருக்கும்: ‘பிட்ச்’ ... ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.67.72 ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.67.72 ...
எச்.டி.எப்.சி., யோசனை; வங்­கிகள் நிலம் வாங்க கடன் தந்தால் ரியல்எ ஸ்டேட் துறை சூடு பிடிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2016
07:15

புது­டில்லி : ‘‘நிலம் வாங்க, பொது துறை வங்­கிகள், வீட்­டு­வ­சதி நிறு­வ­னங்கள் ஆகி­ய­வற்­றுக்கு, ரிசர்வ் வங்கி அனு­மதி அளித்தால், ரியல் எஸ்டேட் துறையின் மந்­த­நிலை மாறும்,’’ என, வீட்­டு­வ­சதி கடன் வழங்கும், எச்.டி.எப்.சி., நிறு­வ­னத்தின் தலைவர் தீபக் பரேக் தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது:ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்­சிக்கு தடை­யாக, பல பிரச்­னைகள் உள்­ளன. ரியல் எஸ்டேட் நிறு­வ­னங்கள், நிலம் வாங்க, வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­க­ளிடம் கடன் பெறு­கின்­றன; அன்­னிய பங்கு முத­லீட்டு நிறு­வ­னங்­களும், நிதி­யு­தவி செய்­கின்­றன.
தடுக்கும் அம்சம்:இந்த கட­னுக்கு, மிக அதி­க­மான வட்டி வசூ­லிக்­கப்­ப­டு­கி­றது. இந்த வட்டிச் செல­வி­னத்­தையும் சேர்த்து தான், நிலத்தின் விலை நிர்­ணயம் செய்­யப்­ப­டு­கி­றது. அதிக விலையால், நிலம் விற்­ப­னை­யா­வதில் தாமதம் ஏற்­ப­டு­கி­றது. இது, ரியல் எஸ்டேட் துறை வளர்ச்­சியை தடுக்கும் அம்­சங்­களில் ஒன்­றாக உள்­ளது. இந்த பிரச்­னைக்கு தீர்வு காண, பொது துறை வங்­கிகள், வீட்­டு­வ­சதி கடன் நிறு­வ­னங்கள் ஆகி­ய­வற்­றுக்கு, நிலம் மீது கடன் வழங்க, ரிசர்வ் வங்கி அனு­மதி அளிக்க வேண்டும். இதன் மூலம், நிலம் வாங்­கு­வோ­ருக்கு, நியா­ய­மான வட்­டியில் கடன் கிடைக்கும். வட்டிச் சுமை குறை­வதால், நிலத்தின் மதிப்பும், குறை­வா­கவே நிர்­ண­யிக்­கப்­படும். நிலம் விலை குறைந்தால், அதன் விற்­பனை அதி­க­ரிக்கும்.
ரிசர்வ் வங்­கியின் வட்டி குறைப்பு நட­வ­டிக்­கைகள் மட்­டுமே, ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்­சிக்கு முழு­மை­யான தீர்வை அளிக்க முடி­யாது. பொது துறை வங்­கிகள், வீட்­டு­வ­சதி கடன் நிறு­வ­னங்கள் ஆகி­ய­வற்­றுக்கும், நிலம் மீது கடன் வழங்க அனு­மதி அளிக்க வேண்டும். குறைந்­த­பட்சம், குடி­யி­ருப்பு திட்­டத்­திற்­கான நிலத்­திற்­கா­வது கடன் வழங்க, அனு­ம­திக்க வேண்டும். மத்­திய அரசு, கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக, ரியல் எஸ்டேட் துறையை ஊக்­கு­விக்க எடுத்து வரும் நட­வ­டிக்­கைகள், பாராட்­டுக்­கு­ரி­யது.குறிப்­பாக, புதிய ரியல் எஸ்டேட் சட்டம், நுகர்­வோ­ருக்கு பாது­காப்பை வழங்­கு­கி­றது. ரியல் எஸ்டேட் செயல்­பா­டு­களை கண்­கா­ணிக்கும் அமைப்பும் ஏற்­ப­டுத்­தப்­பட உள்­ளது.
வளர்ச்சி:இத்­துடன், அனை­வ­ருக்கும் வீடு, நகர்­ம­ய­மாக்கல் திட்­டங்­களும், ரியல் எஸ்டேட் துறையை மேலும் ஊக்­கு­விக்கும்.மாநில அர­சு­க­ளுக்கு இடை­யி­லான கொள்­முதல் திட்­டங்­க­ளுக்கு மின்­னணு ஏல முறை அறி­மு­க­மா­கி­யுள்­ளதால், உயர்­மட்ட அளவில், திட்ட அனு­ம­தி­களில் வெளிப்­படைத் தன்­மையும், லஞ்ச ஊழல் இல்­லாத நிலையும் உரு­வா­கி­யுள்­ளது. இது, மாநி­லங்கள், உள்­ளாட்சி அமைப்­புகள் ஆகி­ய­வற்­றுக்கும் விரி­வ­டை­யும்­பட்­சத்தில் ரியல் எஸ்டேட் உட்­பட, அனைத்து துறை­களின் வளர்ச்­சியும் சிறப்­பாக இருக்கும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)