சிமென்ட் தேவை சூடு பிடிக்கும்: ‘இக்ரா’ அறிக்கைசிமென்ட் தேவை சூடு பிடிக்கும்: ‘இக்ரா’ அறிக்கை ... பெட்ரோல் நிலை­யத்தில் பசும்பால்; ஹரி­யானா மாநி­லத்தில் அறி­முகம் பெட்ரோல் நிலை­யத்தில் பசும்பால்; ஹரி­யானா மாநி­லத்தில் அறி­முகம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சிக்­க­ன­மாக இருப்­பது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2016
07:08

சிக்­க­ன­மாக வாழ்­வதன் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்தும் வகையில் எழு­தப்­பட்ட புத்­த­கங்­களின் வரி­சையில் வரு­கி­றது, ‘தி புருகல் உமன்ஸ் கெய்டு டு ஏ ரிச் லைப்’ புத்­தகம். ஸ்டேசியா ரகோ­லியா தொகுத்­துள்ள இந்த புத்­தகம், பெண்கள் சிக்­க­ன­மாக பின்­பற்றும் வழி­களை முன்­வைத்து சிக்­க­ன­மான வாழ்க்­கைக்கு வழி காட்­டு­கி­றது: சிக்­க­ன­மாக இருப்­பதன் முதல் படி பணத்தை உங்கள் கட்­டுப்­பாட்டில் கொண்டு வரு­வது தான். பணம் எங்கே போகி­றது, எப்­படி குறை­வாக செலவு செய்­வது மற்றும் அதி­க­மாக எப்­படி சேமிக்க வேண்டும் என்று அறிய வேண்டும். ஒவ்­வொரு மாத முடி­விலும், பணம் எங்கே செல்­கி­றது என கேட்­டுக்­கொள்ள வேண்டும். பணத்தை எப்­படி குறை­வாக செலவு செய்­வது என்­பதை அறி­வ­தற்கு முன், அதை எப்­படி செலவு செய்­கி­றீர்கள் என்­பதை அறிந்து கொள்ள வேண்டும். எங்கே ஓட்டை இருக்­கி­றது என்­பதை அறி­வது தான் பணத்தை சேமிக்க சிறந்த வழி என்­பதே சிக்­க­ன­மான பெண்­களின் ஆலோ­ச­னை­யாக இருக்­கி­றது. எல்லா செல­வு­களையும் பட்­டி­ய­லி­டுங்கள். மாத செல­வு­களை பட்­டி­ய­லிட்ட பிறகு எந்த இடத்தில் ஓட்டை ஏற்­ப­டு­கி­றது என கண்­ட­றிந்து விடலாம்.சிக்­க­ன­மான பெண்கள், கடனை வெறுக்­கின்­றனர். குறிப்­பாக கிரெடிட் கார்டு கடனை அதிகம் வெறுக்­கின்­றனர். நீங்கள் ஏற்­க­னவே வாங்­கிய பொரு­ளுக்­காக அதிகம் செலவு செய்­வது சிக்­க­ன­மா­னது அல்ல என அவர்கள் அறிந்­தி­ருக்­கின்­றனர். சிக்­க­ன­மான பெண்கள், தேவை மற்றும் விருப்­பத்­திற்கு இடை­யி­லான வேறு­பாட்டை அறிந்­தி­ருக்­கின்­றனர். தேவை­க­ளுக்­காக செல­வி­டு­வது தவ­றா­னதும் இல்லை. பட்ஜெட் போடும்­போது எவை எல்லாம் தேவை என அறிந்­தி­ருக்க வேண்டும். வீடு, ஆடைகள், உணவு போன்­றவை அடிப்­ப­டை­யான தேவை­க­ளாகும். அதே போல சேமிப்பை முக்­கிய தேவை­யாக உணர வேண்டும். ஓய்­வூ­திய சேமிப்­பிற்கு பட்­ஜெட்டில் முக்­கி­யத்­துவம் அளிக்க வேண்டும். அவ­சர நிதிக்­கான சேமிப்­பிலும் கவனம் தேவை.எது தேவை, எது விருப்பம் என்­பதை பிரித்­த­றி­வது கடி­ன­மாக இருந்­தாலும், உங்கள் பட்ஜெட் இதற்கு அள­வு­கோ­ளாக வைத்­துக்­கொள்ள வேண்டும். பட்­ஜெட்டின் நோக்கம், எவ்­வ­ளவு பணம் வரு­கி­றது மற்றும் எவ்­வ­ளவு செல­வா­கி­றது என்­பதை அறிந்து, செல­வுகள் வரவை மிஞ்­சாமல் இருக்கும் வகையில் அவற்றை கட்­டுப்­ப­டுத்­து­வது தான். பட்­ஜெட்­டுக்கு ஏற்ற வகையில் உங்கள் வாழ்க்கை முறை இருப்­பது அவ­சியம். அதே­போல செல­வு­களை தொடர்ந்து கண்­கா­ணிக்க வேண்டும். குறிப்­பிட்ட தேவை­களுக்­காக பணத்தை தனியே ஒதுக்க வேண்டும்.சேமிப்பில் பணம் இருந்தால் அதுவே மன­திற்கு தைரியம் தரும். இதை உறுதி செய்ய, தினம் ஒரு ரூபாய் சேமிப்­பது, பணத்தை எங்­கேனும் மறைத்து வைப்­பது, சில்­ல­ரை­களை தனியே எடுத்து வைப்­பது போன்ற உத்­தி­களை பயன்­ப­டுத்­தலாம். செல­வு­களை குறைத்து, சேமிப்பை அதி­க­ரிப்­ப­தற்­கான வழி­களை கண்­டு­பி­டிக்க வேண்டும். அதோடு, முக்­கி­ய­மாக வீட்டில் உள்­ள­வர்­க­ளுக்கு மற்றும் குழந்­தை­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுக்க வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)