சிமென்ட் தேவை சூடு பிடிக்கும்: ‘இக்ரா’ அறிக்கைசிமென்ட் தேவை சூடு பிடிக்கும்: ‘இக்ரா’ அறிக்கை ... பெட்ரோல் நிலை­யத்தில் பசும்பால்; ஹரி­யானா மாநி­லத்தில் அறி­முகம் பெட்ரோல் நிலை­யத்தில் பசும்பால்; ஹரி­யானா மாநி­லத்தில் அறி­முகம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிகர மதிப்பு கணக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2016
07:12

உங்கள் நிகர மதிப்பு என்ன தெரி­யுமா? என்­பது தனி­நபர் நிதி திட்­ட­மி­டலில் முக்­கிய கேள்வி. ரொக்கம் உட்­பட சொத்­துக்கள் என கருதும் தொகைக்கும், கடன் பொறுப்­பு­க­ளுக்கும் இடை­யி­லான வேறு­பாடே நிகர மதிப்­பாக அமை­கி­றது. லட்­சா­தி­ப­தி­களும், கோடீஸ்­வ­ரர்­களும் தான் நிகர மதிப்பை கணக்­கிட வேண்டும் என்­றில்லை. நிதி வாழ்க்­கையை சீராக்கி கொள்ள விரும்பும் ஒவ்­வொ­ரு­வரும் தன் நிகர மதிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
ஏன் முக்கியம்நிகர மதிப்பு என்­பது மிகவும் முக்­கி­ய­மா­னது. ஒரு­வ­ரு­டைய சம்­பளம் அல்­லது மாத பட்­ஜெட்டை போலவே அதுவும் முக்­கி­ய­மா­னது. ஏனெனில், அது தான் ஒரு­வ­ரு­டைய மொத்த நிதி வாழ்க்­கை­யையும் எண்­ணிக்­கை­யாக சுருக்கித் தரு­கி­றது. இது­வரை எவ்­வ­ளவு செல்வம் சேர்ந்­தி­ருக்­கி­றது என்­ப­தையும், எவ்­வ­ளவு கடன் பொறுப்பு இருக்­கி­றது என்­ப­தையும் அது உணர்த்­து­கி­றது. இரண்­டுக்கும் இடை­யி­லான வேறு­பாடு தான் நிகர மதிப்பு.
நிதி ஸ்கோர் கார்டுநிகர மதிப்பின் ஆற்­றலை அறிய, அதை மாத பட்­ஜெட்­டுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ஒவ்­வொரு மாதமும், வரு­மா­னமும் இருக்கும், செல­வு­களும் இருக்கும். வரு­மா­னத்தில் செல­வுகள் போக மிச்­ச­முள்ள தொகை நிகர மதிப்பில் சேரும். இது, சேமிப்பு மூலம் அல்­லது கட­னுக்­கான தவணை செலுத்­து­வது மூலம் கூட நிக­ழலாம்.வரு­மா­னத்தை விட அதிகம் செலவு செய்தால், நிகர மதிப்பு குறையும். நிகர மதிப்பு என்­பது நிதி ஸ்கோர் கார்டு போன்­றது.
எப்படி கணக்கிடுவதுநிகர மதிப்பை கணக்­கி­டு­வது எளி­தா­னது. ஒரு காகி­தத்தில் கையில் உள்ள ரொக்கம், சேமிப்பு, ஓய்­வூ­திய கணக்கு, முத­லீடு, சொத்­துக்கள் உள்­ளிட்­ட­வற்றை குறிப்­பிட்டு அதன் மொத்த தொகையை கணக்­கிட வேண்டும். இன்­னொரு பக்கம் கடன் பொறுப்­பு­களை பட்­டி­ய­லிட்டு கணக்­கிட வேண்டும். சொத்­துக்­களில் இருந்து கடனை கழித்தால் வரும் தொகை தான் நிகர மதிப்பு. இதற்­காக, கம்ப்­யூட்­டரில் எக்செல் கோப்­பையும் பயன்­ப­டுத்­தலாம்.

என்ன பயன்* நிகர மதிப்பை கணக்­கி­டு­வதன் மூலம் நிதி முன்­னேற்­றத்தை அறி­யலாம். கடந்த மாதங்­களை திரும்பி பார்த்து என்ன முன்­னேற்றம் என்­பதை தெரிந்து கொள்­ளலாம் * நிகர மதிப்பை கணக்­கி­டு­வது நம்­பிக்­கையை அதி­க­மாக்கும். ஓய்­வூ­திய நிதி அல்­லது அவ­சர கால நிதிக்கு அதிக தொகை ஒதுக்­கி­யி­ருப்­பது போன்­றவை ஊக்கம் அளிக்கும்* சொத்­துக்கள், முத­லீட்டில் மட்டும் கவனம் செலுத்­தாமல், கடன் பொறுப்­பு­க­ளையும் மனதில் கொள்வது, நிதி ஆரோக்­கி­யத்தை உணர்த்தும்* நிதிப்­பா­தையில் இப்­போது எந்த இடத்தில் இருக்­கி­றீர்கள், தொடர்ந்து நிதி இலக்கை நோக்கி முன்­னேற என்ன செய்ய வேண்டும் என்­பதை புரிய வைக்கும்.
நிதி வரைபடம்நிகர மதிப்பை தொடர்ந்து கண்­கா­ணிக்க வேண்டும். மாதம் ஒரு முறை­யேனும் கணக்­கிட்டு பார்ப்­பது நல்­லது. அதோடு நிகர மதிப்பை ஒரு­வ­ரு­டைய வயது மற்றும் வரு­மா­னத்­துடன் ஒப்­பிட்டுப் பார்க்க வேண்டும். நிதி இலக்­கு­க­ளு­டனும் ஒப்­பிட வேண்டும். மாதந்­தோறும் நிகர மதிப்பை வரை­படம் போல குறித்து வரலாம். இந்த வரை­படம் நிதி வாழ்க்­கையின் முன்­னேற்றம் எப்­படி இருக்­கி­றது என அறிய உதவும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)