சிமென்ட் தேவை சூடு பிடிக்கும்: ‘இக்ரா’ அறிக்கைசிமென்ட் தேவை சூடு பிடிக்கும்: ‘இக்ரா’ அறிக்கை ... பெட்ரோல் நிலை­யத்தில் பசும்பால்; ஹரி­யானா மாநி­லத்தில் அறி­முகம் பெட்ரோல் நிலை­யத்தில் பசும்பால்; ஹரி­யானா மாநி­லத்தில் அறி­முகம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சம்­பள உயர்வை முத­லீடு செய்­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2016
07:13

சம்­பள கமிஷன் பரிந்­து­ரைகள், ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில், மத்திய அரசு ஊழி­யர்கள் தங்கள் சம்­பள உயர்வை சரி­யான முறையில் முத­லீடு செய்ய வேண்டும் என நிதி ஆலோ­ச­கர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.
ஏழா­வது சம்­பள கமிஷன் பரிந்­து­ரை­களை, மத்­திய அமைச்­ச­ரவை ஏற்­றுக்­கொண்­டுள்­ளதை அடுத்து, மத்­திய அரசு ஊழி­யர்கள் மற்றும் ஓய்­வூ­தியம் பெறுபவர்கள் பல­ன­டைய உள்­ளனர். இதன் பய­னாக சம்­பள உயர்வு மற்றும் அரியர்ஸ் மூலம் ரொக்கம் ஆகி­யவை கிடைக்க உள்­ளது. அரசு ஊழி­யர்­களின் சம்­பள உயர்வு கார­ண­மாக அவர்­களின் வாங்கும் சக்தி அதி­க­ரித்து அதற்­கேற்ப நுகர்வும் அதி­க­ரிக்கும் என கரு­தப்­ப­டு­கி­றது. இது பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு உதவும் என்ற கருத்தும் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.சம்­பள உயர்வு மற்றும் போனஸ் கிடைக்கும் போது, அதிகம் செலவு செய்­வது மற்றும் நீண்ட கால­மாக வாங்க திட்­ட­மிட்­டுள்ள பொருட்­களை வாங்­கு­வ­தற்­கான விருப்பம் ஏற்­ப­டு­வது இயற்­கை­யா­னது தான். எனினும், ஊழி­யர்கள் சம்­பள உயர்வின் உற்­சா­கத்தால் செலவு செய்­வதில் ஈடு­ப­டு­வதை விட, சரி­யான முறையில் திட்­ட­மிட்டு முத­லீட்டு நோக்கில் செயல்­ப­டு­வ­தற்கே முன்­னு­ரிமை அளிக்க வேண்டும் என நிதி ஆலோ­ச­கர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.
நிதி திட்­ட­மிடல்செல­வு­களை தீர்­மா­னிப்­ப­தற்கு முன், முதலில் நிதி திட்­ட­மி­டலை மேற்­கொள்ள வேண்டும். தங்கள் நிதி சூழலை ஆய்வு செய்து, அதில் இடை­வெளி உள்ள இடங்­களை முதலில் நிரப்ப வேண்டும் என்­கின்­றனர். நீண்­ட­கால நோக்கில் முத­லீடு செய்­வது மற்றும் ஏற்­க­னவே உள்ள கடனை அடைப்­பது ஆகி­ய­வற்­றுக்கே முன்­னு­ரிமை அளிக்க வேண்டும். உதா­ர­ணத்­திற்கு கிரெடிட் கார்டு கடன் அல்­லது தனி­நபர் கடன் இருந்தால், முதலில் அதை முடிக்க பார்க்க வேண்டும். வீட்­டுக்­கடன் இருந்தால், கணி­ச­மான ஒரு தொகையை செலுத்தி, கடன் காலத்தை குறைக்க வேண்டும்.அதே­போல அவ­சர கால நிதியில் கூடுதல் தொகையை சேர்க்க வேண்டும். இது­வரை அவ­சர கால நிதி உரு­வாக்­கப்­ப­ட­வில்லை என்றால், அத்­த­கைய நிதியை உரு­வாக்க இந்த தரு­ணத்தை பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும். அவ­சர கால நிதி என்­பது எதிர்­பா­ராத நெருக்­க­டியால் பாதிப்பு ஏற்­படும் நேரத்தில் கைகொ­டுக்க கூடி­யது.
காப்­பீடு பாது­காப்புபோது­மான காப்­பீடு இருக்­கி­றதா என ஆய்வு செய்து, தேவை இருந்தால், அதற்­கேற்ப காப்­பீட்டை அதி­க­மாக்கி கொள்ள வேண்டும். பொது­வாக, ஆண்டு சம்­ப­ளத்தில் 10 மடங்கு அளவு பாது­காப்பு அளிக்கும், ‘டெர்ம் இன்­சூரன்ஸ் தேவை’ என வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது. அதே­போல மருத்­துவக் காப்­பீட்­டிலும் கவனம் செலுத்த வேண்டும்.கடன் தவணை, காப்­பீடு ஆகி­ய­வற்­றுக்கு தேவை­யான ஒதுக்­கீடு செய்த பிறகே, முத­லீட்டு முடி­வு­களை மேற்­கொள்ள வேண்டும் என்று நிதி ஆலோ­ச­கர்கள் கூறு­கின்­றனர். முத­லீட்டை தீர்­மா­னித்த பிறகே பொருட்­களை வாங்க வேண்டும் என்­கின்­றனர். கார் வாங்க விரும்­பி­னாலும் சரி, ‘எல்.இ.டி., டிவி’ போன்ற ஆடம்­பர பொருட்­களை வாங்க விரும்­பி­னாலும் சரி பொறுத்­தி­ருக்க வேண்டும்.
முத­லீ­டுகள் நிதி இலக்­கு­களை சரி பார்த்து அதற்­கேற்ப முத­லீ­டுகள் அமைந்­துள்­ள­னவா என பரி­சீ­லிக்க வேண்டும். நீண்ட கால இலக்­கு­க­ளுக்கு ஏற்ப மியூச்­சுவல் பண்ட் அல்­லது எஸ்.ஐ.பி., திட்­டங்­களை தேர்வு செய்­யலாம். ரொக்­க­மாக தொகை கையில் வந்தால், மியூச்­சுவல் பண்டில் உள்ள, ‘சிஸ்­ட­மேட்டிக் டிரான்ஸ்பர் பிளான்’ போன்­ற­வையை பயன்­ப­டுத்­திக்­கொள்­ளலாம். சம­பங்கு மியூச்­சுவல் பண்ட் திட்­டங்­களில் முத­லீடு செய்ய தயக்கம் இருந்தால் பி.பி.எப்.,ல் முத­லீடு செய்­வதை பரி­சீ­லிக்­கலாம். வைப்பு நிதி­க­ளிலும் முத­லீடு செய்­யலாம். வரும் மாதங்­களில் வட்டி குறைப்பு நிகழ வாய்ப்­பி­ருப்­பதால், வைப்பு நிதியில் முத­லீடு செய்ய இது ஏற்ற தருணம்.
ரியல் எஸ்­டேட்டில் முத­லீடு செய்ய விரும்­பு­கி­ற­வர்கள் பல விஷ­யங்­களை பரி­சீ­லிக்க வேண்டும். சொந்த நிதி கையில் இருக்கும் நிலையில் மற்றும் சரி­யான இருப்­பி­டத்தில் வீடு அமைந்­தி­ருக்கும் நிலையில் மட்­டுமே வருங்­கால முத­லீட்டு ஆதா­யத்­திற்­காக வீடு வாங்­கு­வது ஏற்­ற­தாக இருக்கும் என கரு­தப்­ப­டு­கி­றது. அதே நேரத்தில் சொந்த உப­யோ­கத்­திற்­காக வீடு வாங்க ஏற்ற தரு­ண­மா­கவே இது அமை­கி­றது. வீட்டுக் கடன்கள் எம்.சி.எல்.ஆர்., கணக்­கீடு முறை­யுடன் தொடர்பு கொண்­டி­ருப்­பதால், வட்டி விகித மாற்­றத்தின் பலனை பெற முடியும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)