பதிவு செய்த நாள்
04 ஜூலை2016
07:19
புதுடில்லி : லிபர்ட்டி வீடியோகான் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், 40 கிளை அலுவலகங்களை திறக்க உள்ளது.தற்போது, லிபர்ட்டி வீடியோகான் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு, 35 இடங்களில் கிளை அலுவலகங்கள் இருக்கின்றன. இன்னும், நான்கு மாத கால அளவில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில், 40 கிளை அலுவலகங்களை திறக்க இருக்கிறது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் சில்லரை வணிகத்தின் தலைவர் பங்கஜ் அரோரா கூறியதாவது: மோட்டார் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகியவை தான், எங்கள் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு துணைபுரியும் என கருதுகிறோம். எங்கள் வருவாயில், மோட்டார் இன்சூரன்ஸ் குறிப்பிடத் தகுந்த பங்கு வகிக்கிறது. நாங்கள் இருசக்கர வாகனத்துக்கு, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிப்பிக்கத்தக்க பாலிசியை அறிமுகம் செய்திருக்கிறோம். எங்கள் சேவையை நாடெங்கும் விரிவுபடுத்தும் முயற்சியில் இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|