பதிவு செய்த நாள்
06 ஜூலை2016
04:58
புதுடில்லி : எல் அண்டு டி இன்போடெக்கின் பங்கு வெளியீடு, வரும் 11ம் தேதி துவங்குகிறது. எல் அண்டு டி–யின் துணை நிறுவனம், எல் அண்டு டி இன்போடெக். இந்த நிறுவனம், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், விரிவாக்க திட்டங்களுக்கு தேவையான நிதியை, ஐ.பி.ஓ., எனப்படும் பங்கு வெளியீடு மூலம் திரட்டி கொள்ள திட்டமிட்டு உள்ளது. அதன்படி, எல் அண்டு டி இன்போடெக்கின் பங்கு வெளியீடு, வரும் 11ம் தேதி துவங்கி, 13ம் தேதி முடிவடைகிறது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு பணிகளை, சிட்டி குரூப் குளோபல் மார்கெட்ஸ், கோட்டக் மகிந்திரா கேபிடல், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ளன. கடந்த, 2015 – 16ம் நிதி ஆண்டில், எல் அண்டு டி இன்போடெக்கின் செயல்பாட்டு லாபம், 1,331.50 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது. இந்நிறுவனம், 2015ல், இந்திய ஐ.டி., நிறுவனங்களில், ஏற்றுமதி மூலம் அதிக வருவாய் ஈட்டுவதில், ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|