பதிவு செய்த நாள்
07 ஜூலை2016
05:39

புதுடில்லி : உள்நாட்டில், விமான பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நாடுகளில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
இதுகுறித்து, சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பான, ஐ.ஏ.டி.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில், ஆண்டுக்கு சராசரியாக, எட்டு கோடி பேர் உள்நாட்டில் விமான பயணம் மேற்கொள்கின்றனர். அதனடிப்படையில், 2015ல், இந்தியாவின் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை, 18.8 சதவீதம் என்ற அளவில், மிக வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது.
இந்த வளர்ச்சி, 4.70 கோடி உள்நாட்டு பயணிகளைக் கொண்ட ரஷ்யாவில், 11.9 சதவீதமாகவும், 39.40 கோடி உள்நாட்டு பயணிகள் உள்ள சீனாவில், 9.7 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது. உலகளவில், உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை வளர்ச்சியில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு, உலக மக்கள் தொகையில், 48 சதவீதம் பேர், அதாவது, 360 கோடி பேர், விமான பயணம் மேற்கொண்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|