பதிவு செய்த நாள்
07 ஜூலை2016
05:45

திருப்பூர் : மத்திய ஜவுளித் துறை அமைச்சராக, நேற்று பொறுப்பேற்றுள்ள ஸ்மிருதி இரானிக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல், கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஜவுளித் துறை வளர்ச்சிக்கு, மத்திய அரசு, சமீபத்தில் ஏராளமான சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. எனினும், சலுகைகள் குறித்த விரிவான அறிக்கை, இன்னும் வெளியிடப்படவில்லை. குறிப்பாக, ‘பேக்கேஜ்’ திட்ட சலுகைகள் குறித்து, விரிவான அறிக்கையை, விரைவில் வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இந்திய தொழில் கூட்டமைப்பு மாநில கவுன்சில் பிரதிநிதி ராஜா சண்முகம் கூறுகையில், ‘‘புதிய ஜவுளி அமைச்சர், பின்னலாடை துறைக்கு தன வாரியம் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில் ஜவுளித்துறை வளர்ச்சிக்கு 6,000 கோடி ரூபாய்க்கு அதிகமான சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|