பதிவு செய்த நாள்
07 ஜூலை2016
05:45

புதுடில்லி : ‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, அறிவிக்கப்பட்டதை விட குறைவாகவே இருக்கும்’ என, அமெரிக்க அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறையின், அறிக்கை தெரிவிக்கிறது.அதன் விவரம்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.5 சதவீதம் என்றளவில் இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், அது, மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு என, கருத இடமுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஏராளமான சீர்திருத்த திட்டங்களை, அமல்படுத்தியுள்ளது. அந்த திட்டங்களுக்கு ஏற்ப, பொருளாதார வளர்ச்சியில் வேகமில்லை; மந்த நிலை காணப்படுகிறது. அதனால், இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியும், எதிர்கால மதிப்பீடும், மிகையாக உள்ளதாக தெரிகிறது. அதேசமயம், அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை தளர்த்தியது, வர்த்தக நடைமுறைகளை சுலபமாக்கியது உள்ளிட்ட, பிரதமர் மோடியின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|