பதிவு செய்த நாள்
07 ஜூலை2016
05:47

புதுடில்லி : சர்வதேச தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச்’ வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய வங்கிகள், வாராக்கடன் பிரச்னையில் சிக்கியுள்ளன. அவற்றின் வருவாயும் குறைந்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு மற்றும் இரும்பு, உருக்கு உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவனங்கள், சர்வதேச நெருக்கடியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. இத்துறை நிறுவனங்களின் வாராக்கடன், வங்கிகளுக்கு பெரும் சுமையாக உள்ளது. கடந்த, 2015 – 16ம் நிதியாண்டு நிலவரப்படி, வங்கிகளின் வாராக்கடன், 13 சதவீதம் அதிகரித்து, 8 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அடுத்த, 1 – 2 ஆண்டுகளில், வாராக்கடன், வங்கிகளின் சொத்து மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனால், இந்திய வங்கிகளின் செயல்பாடுகள், நீண்ட கால அடிப்படையில், ‘ஸ்திரத்தன்மை’ என்ற நிலைப்பாட்டில் இருந்து, ‘இடர்ப்பாட்டிற்கு வாய்ப்புள்ளது’ என்ற பிரிவிற்கு தரவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|