பதிவு செய்த நாள்
07 ஜூலை2016
05:47

புதுடில்லி : மொபைல் போனில், இணையதள சேவைக்கான அதிகபட்ச கால வரம்பை, ஓராண்டு வரை நீட்டிக்க, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையமான, ‘டிராய்’ திட்டமிட்டு உள்ளது. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், மொபைல் போன் மூலம், இணையதளத்தை பயன்படுத்தும் வசதியை வழங்கி வருகின்றன. தற்போது, இந்த சேவை, அதிகபட்சமாக, 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்பின், மீண்டும் ரீசார்ஜ் செய்யும் நிலை உள்ளது. இந்த வரம்பை, ஓராண்டிற்கு நீட்டிக்க, டிராய் திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, டிராய் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மொபைல் போன் இணையதள சேவைக்கான காலவரம்பை, ஓராண்டு வரை நீட்டிக்க, தொலைத்தொடர்பு சேவை விதிமுறைகளில் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்த வரைவறிக்கை, டிராய் வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. வரும் 26ம் தேதிக்குள், பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|